For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லெபனான்.. 7 வருடம் முன் விளையாடிய விதி.. ரஷ்ய பிஸ்னஸ்மேன் மீது வலுக்கும் சந்தேகம்.. சிக்கும் தலைகள்!

Google Oneindia Tamil News

பெய்ரூட்: லெபனானில் நடந்த பெய்ரூட் கிடங்கு வெடிப்பு காரணமாக உலக நாடுகளின் கவனம் ரஷ்யா மீதும், சிஐஏ இதில் வைத்து இருக்கும் புதிய கோணம் மீதும் திரும்பி உள்ளது.

Recommended Video

    கோபத்தில் LEBANON மக்கள் ! வெடிக்க காத்திருக்கும் BEIRUT

    லெபனான் வெடிப்பு காரணமாக மொத்தமாக 137 பேர் வரை இதுவரை பலியாகி உள்ளனர். 4500 பேர் வரை மிக மோசமாக காயம் அடைந்துள்ளனர். 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து உள்ளனர்.

    இன்னொரு பக்கம் அங்கு 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. லெபனானை உடைத்து போட்ட கிடங்கு வெடிப்புக்கு பின் நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது.

    லெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு லெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு

    லெபனான் மோதல்

    லெபனான் மோதல்

    இந்த நிலையில் லெபனானில் நடத்த பெய்ரூட் கிடங்கு வெடிப்பு காரணமாக உலக நாடுகளின் கவனம் ரஷ்யா மீதும், சிஐஏ இதில் வைத்து இருக்கும் புதிய கோணம் மீதும் திரும்பி உள்ளது. இதில் ரஷ்யா மீது சந்தேகம் உருவாவதற்கு காரணம், அந்த பெய்ரூட் கிடங்கில் வெடித்த அம்மோனியம் நைட்ரேட் முழுக்க முழுக்க ரஷ்யாவிற்கு சொந்தமானது ஆகும். ரஷ்யாவின் தொழிலதிபர் ஈகோர் கிரேஷ்கின் என்பவருக்கு சொந்தமானது ஆகும்.

    ரஷ்யா கப்பல்

    ரஷ்யா கப்பல்

    கடந்த 2014ல் இவருக்கு சொந்தமான கப்பல்தான் அம்மோனியம் நைட்ரேட்டை ஏற்றிக்கொண்டு லெபனான் கடல் பகுதி அருகே வந்துள்ளது. அப்போது கப்பலில் கோளாறு ஏற்பட்டுவிட்டது என்று கூறி லெபனானில் இந்த கப்பலை நிறுத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில் லெபனான் சுங்கத்துறை அதிகாரிகள், அந்த அம்மோனியம் நைட்ரேட்டை அபகரிக்க ஆசைப்பட்டு, அந்த கப்பலை திரும்பி செல்ல விடாமல் அங்கேயே முடக்கி இருக்கிறார்கள்.

    சந்தேகம் வந்தது

    சந்தேகம் வந்தது

    இதில் ரஷ்யா மீது சந்தேகம் வர பின் வரும் காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த கப்பல் உண்மையில் கோளாறுக்கு உள்ளானதா? அல்லது அம்மோனியம் நைட்ரேட்டை லெபனான் கொண்டு வருவதற்காக ரஷ்யா சதித்திட்டம் தீட்டியதா என்று கேள்வி எழுந்துள்ளது. அதாவது அம்மோனியம்நைட்ரேட்டை லெபனான் கொண்டு செல்ல வேண்டும் என்ற இப்படி பொய்யான காரணத்தை ரஷ்ய தொழில் அதிபர் கூறினாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

    அம்மோனியம் நைட்ரேட் எப்படி

    அம்மோனியம் நைட்ரேட் எப்படி

    அதோடு இந்த அம்மோனியம் நைட்ரேட்டை திருப்பி கொடுத்த போதும் ரஷ்யா அதை வாங்க மறுத்துள்ளது. ரஷ்யாவின் தொழிலதிபர் ஈகோர் கிரேஷ்கின் நிறுவனம் திவாலாகிவிட்டது. இதனால் அந்த அம்மோனியம் நைட்ரேட்டை இடமாற்றம் செய்ய முடியாது என்று ரஷ்யா கூறியுள்ளது. இதனால் திட்டமிட்டு அந்த அம்மோனியம் நைட்ரேட் அங்கேயே முடக்கப்பட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது.

    சிஐஏ கேள்வி

    சிஐஏ கேள்வி

    இன்னொரு பக்கம் இதில் சிஐஏவும் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளது. அதன்படி இந்த வெடிப்பில் முதலில் வெடித்தது மட்டும்தான் அம்மோனியம் நைட்ரேட். இரண்டாவது வெடித்தது அம்மோனியம் நைட்ரேட் கிடையாது. அங்கு எதோ குண்டு இருந்துள்ளது. அதுதான் இரண்டாவது முறை வெடித்து இருக்கிறது . அதனால்தான் அப்படி பெரிய வெடிப்பு நிகழ்ந்தது . இதை யாரோ திட்டமிட்டு செய்துள்ளனர்.

    குண்டு சந்தேகம்

    குண்டு சந்தேகம்

    அந்த குண்டு வெடித்த போது பெரிய அளவில் சிவப்பு புகை வந்தது. அந்த சிவப்பு புகையின் அர்த்தம், அங்கு பெரிய குண்டு ஒன்று இருந்தது என்பதாகும், என்று சிஐஏ கூறியுள்ளது. 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் என்பது கிட்டத்தட்ட 1100 குண்டுகளை உருவாக்க முடியும். அந்த அளவிற்கு இந்த கெமிக்கல் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும்.

    English summary
    Beirut Blast: Russian businessman on the focus after suspicious ammonium nitrate storage that craked Lebanon apart.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X