For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லெபனான்.. போரில் கூட ஏற்படாத சேதம்.. 30 நொடியில் வீட்டை இழந்த 3 லட்சம் பேர்.. பல்லாயிரம் பேர் மாயம்!

பெய்ரூட்: லெபனான் நாட்டில் நேற்று ஏற்பட்ட கிடங்கு வெடிப்பில், போரில் கூட ஏற்படாத மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

பெய்ரூட்: லெபனான் நாட்டில் நேற்று ஏற்பட்ட கிடங்கு வெடிப்பில், போரில் கூட ஏற்படாத மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    வெடித்துச் சிதறிய 2750 டன் Ammonium Nitrate, 200 KM-க்கு அப்பால் சத்தம் | Oneindia Tamil

    எங்கு திரும்பினாலும் உடல்கள்.. உடைந்த உடல் பாகங்கள்.. ரத்த வாடை.. உடைந்து கிடக்கும் வாகனங்கள், கண்ணாடிகள், உருத்தெரியாமல் கிடக்கும் கட்டிடங்கள். 10 வருடமாக கொஞ்சம், கொஞ்சமாக கட்டி எழுப்பப்பட்ட பெய்ரூட் நகரம் மொத்தமாக உடைந்து நொறுங்கி இருக்கிறது.

    ஏற்கனவே இருந்த பொருளாதார சரிவை மொத்தமாக முடக்கும் வண்ணம் பெய்ரூட் பகுதியில் நேற்று நடந்த கிடங்கு விபத்து மாறியுள்ளது. இன்னும் பல வருடங்களுக்கு அந்த நாடு இந்த சரிவில் இருந்து மீண்டு வர முடியாது என்கிறார்கள்.

    பணிகள் முடியவில்லை

    பணிகள் முடியவில்லை

    யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீர் என்று லெபனான் தலைநகர் பெய்ரூட் பகுதியில் இருக்கும் துறைமுகத்தில் நேற்று மிகப்பெரிய கிடங்கு வெடி விபத்து ஏற்பட்டது. கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த ஆபத்து வாய்ந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியது. இந்த கிடங்கு வெடிப்பு இந்திய நேரப்படி நேற்று இரவு ஏற்பட்டாலும், இன்னும் அங்கு மீட்பு பணிகள் முழுதாக செய்யப்படவில்லை.

    எத்தனை பேர் மரணம்

    எத்தனை பேர் மரணம்

    தற்போது வரை நிலவரப்படி மொத்தம் 100 பேர் இந்த சம்பவத்தில் பலியாகி உள்ளனர். மொத்தமாக 4000 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆனால் உண்மையில் பலி எண்ணிக்கை குறைந்தது 200ஐ தாண்டும் என்று கூறுகிறார்கள். அதேபோல் இன்னொரு பக்கம் கண்டிப்பாக எப்படியும் காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5000ஐ தாண்டும் என்றும் கூறுகிறார்கள்.

    மாயம்

    மாயம்

    இதில் சோகம் பலர் இந்த சம்பவத்தில் மாயமாகி உள்ளனர். 1500 பேர் வரை தற்போது வரை காணவில்லை. இவர்கள் எங்கே போனார்கள் என்று இன்னும் தெரியவில்லை. இவர்களை மீட்க தனியாக படை அமைக்கப்பட்டுள்ளது. தனியாக உதவி எண்களும் இதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. 500க்கும் அதிகமான குழந்தைகள் இதில் காணாமல் போய் உள்ளனர்.

    வீட்டை இழந்தனர்

    வீட்டை இழந்தனர்

    மொத்தம் இந்த சம்பவத்தில் 3 லட்சம் பேர் வீட்டை இழந்து இருக்கிறார்கள். மொத்தம் 5 மில்லியன் டாலருக்கு பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. பெய்ரூட் நகரம் மட்டும் 40 ஆண்டுகள் பின்னோக்கி சென்று இருக்கிறது. பெய் ரூட்டில் இருக்கும் 90% மருத்துவமனைகள் உடைந்து நொறுங்கி பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளது. 75% வீடுகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளது.

    மோசமாகும் நிலை

    மோசமாகும் நிலை

    மீண்டும் அங்கு லெபனான் அரசு நகரத்தை கட்டி எழுப்ப பத்து வருடங்களுக்கு மேல் ஆகும் என்று கூறுகிறார்கள். லெபனான் இதுவரை வரலாற்றில் பல போர்களை சந்தித்து இருக்கிறது. 2006 லெபனான் போர், லெபனான் சிவில் வார், லெபனான் சிரியா வார், 2005 லெபனான் மக்கள் புரட்சி, 2007, 2008 லெபனான் கலவரம் என்று அந்த நாடு பல இன்னல்களை சந்தித்து இருக்கிறது. அந்த நாடு கடந்த 5 வருடமாகத்தான் கொஞ்சம் அமைதியாக இருந்தது

    ஆனால் மோசம்

    ஆனால் மோசம்

    ஆனால் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் லெபானில் தற்போது கிடங்கு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. லெபனானின் அரசியலில் இதுவரை இல்லாத மிக மோசமான சம்பவம் இதுவாகும். இதுவரை போர்களில் கூட இப்படி ஒரு சேதம் ஏற்படவில்லை என்று கூறுகிறார்கள். இதனால் அங்கு மக்கள் புரட்சி, ஆட்சி மாற்றம் என்று பெரிய மாற்றங்கள் ஏற்பட போகிறது, என்று கூறுகிறார்கள்.

    English summary
    v
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X