For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகை உலுக்கிய லெபனான் வெடிவிபத்து- பெய்ரூட்டில் இலங்கை, பெல்ஜியம் தூதரகங்களுக்கும் சேதம்

Google Oneindia Tamil News

பெய்ரூட்: உலக நாடுகளை அதிரவைத்துள்ள லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிவிபத்தில் இலங்கை, பெல்ஜியம் தூதரகங்களும் சேதமடைந்துள்ளன.

பெய்ரூட்டில் கிடங்கு ஒன்றில் 2,700 டன் வெடிபொருள் வெடித்து சிதறியது. இந்த படுபயங்கரமான வெடிவிபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். 4,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

Beirut Srilanka Embassy daamaged in Explosion

இதனால் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது மிக மோசமான பயங்கர தாக்குதல் என அமெரிக்கா கூறுகிறது. ஆனால் லெபனானோ வெடிபொருள் விபத்துதான் என அடித்து சொல்கிறது.

இதனிடையே பெய்ரூட்டில் இலங்கை, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களும் வெடிபொருள் விபத்தில் பெரும் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 10கி.மீ. தொலைவில் இலங்கை தூதரகம் உள்ளது.

மொத்தம் 3 மணி நேரம்.. அயோத்தியில் பிரதமர் மோடியின் ஷெட்யூல் இதுதான்மொத்தம் 3 மணி நேரம்.. அயோத்தியில் பிரதமர் மோடியின் ஷெட்யூல் இதுதான்

வெடிவிபத்தில் இலங்கை தூதரக கட்டிடங்கள் சேதமடைந்தன. இலங்கையை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்திருக்கிறார். இதேபோல் பெல்ஜியம் தூதரகமும் சேதமடைந்துள்ளது. பெல்ஜியம் தூதரக ஊழியர்களும் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Srilanka Embassy in Beirut also damaged in Explosion on yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X