For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன அழுத்தமா... ஓடிப் போய் பாத்திரம் கழுவுங்க... காணாமப் போய்டும்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: சமையலையில் உள்ள அழுக்குப் பாத்திரங்களை முழு கவனத்தோடு கழுவினால் மன அழுத்தம் குறைவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகின்றது.

விதவிதமாக சமைத்து, மற்றவர்கள் வயிறார பசியமர்த்தும் போது வரும் நிம்மதி, விருந்திற்குப் பின் சமையறையில் அடுக்கிக் கிடக்கும் அழுக்குப் பாத்திரங்களைப் பார்த்தால் பெண்களுக்குக் காணாமல் போய் விடும்.

அதனால் தான் மார்க்கெட்டில் விதவிதமான சமையல் பாத்திரங்களைக் கழுவும் திரவங்கள், சோப்புகள் விற்கப்படுகின்றன. அவற்றில் பாத்திரங்களை கழுவினால், பாத்திரங்கள் புதியது போல் பளபளப்பாக மாறும், கையும் பட்டுப்போல் இருக்கும் என விளம்பரங்களில் கூறப்படுகிறது. ஆனால் நிஜத்தில் கை வலித்து, அதற்கான மருந்துகளைத் தேடும் நிலையில்தான் பெண்கள் உள்ளனர்.

எளிய வழி...

எளிய வழி...

ஆனால், மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு மன அழுத்தத்தைக் குணமாக்குவதை விட எளிய வழி ஒன்று இருப்பதாகக் கூறுகிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். அது வேறொன்றுமில்லை அடுப்படியில் இருக்கும் பாத்திரங்களை அள்ளிப் போட்டு துலக்குவதுதான்.

பாத்திரம் கழுவுங்கள்...

பாத்திரம் கழுவுங்கள்...

இது அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாத்திரங்களைக் கவனமாகத் தேய்த்து சுத்தம் செய்யும் போது மனதில் நேர்மறையான எண்ணங்கள் உதிப்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

லேசான மனம்...

லேசான மனம்...

சுமார் 51 மாணவர்களைக் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டதாகவும், இதில் பலரும், தங்கள் கவனத்தை செலுத்தி பாத்திரங்களை தேய்த்து முடித்த போது மனம் லேசாக இருப்பதை உணர்ந்ததாகவும் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஆடம் ஹேன்லி தெரிவித்துள்ளார்.

நிம்மதி...

நிம்மதி...

இதில் 27 சதவீதம் பேருக்கு பெருமளவில் பதட்டம் குறைந்ததாக தெரிய வந்தது. அதேசமயம், 25 சதவீதம் பேருக்கு மனதளவில் நிம்மதி வந்ததாக தெரிய வந்ததாம்.

English summary
If a look at the piling dishes in the kitchen sink after a long day gives you a headache, just take a deep breath and plunge into action! New research has found that washing dishes with full concentration may calm the mind and reduce your stress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X