For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கை தவறி தண்ணீருக்குள் விழுந்த ஐபோன்.. பத்திரமாக மீட்டு தந்த திமிங்கலம்.. வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

நார்வே : நார்வே நாட்டில் தண்ணீருக்குள் விழுந்த செல்போனை மீட்டு வந்து கொடுக்கும் திமிங்கலம் ஒன்றின் வீடியோ, சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

பெலுகா என்ற இனத்தை சேர்ந்த திமிங்கலம் ஒன்று, தவறி தண்ணீருக்குள் விழுந்த ஐபோன் ஒன்றை நீருக்குள் மூழ்கி சென்று மேலே எடுத்து வந்து மீட்டு கொடுத்துள்ளது.

Beluga whale returned a dropped Phone to its owner after diving to retrieve..viral video

அந்நாட்டை சேர்ந்த ஒருவர் படகு சவாரி செய்து இயற்கை காட்சிகளை தனது போனில் படம் பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது போன் கைதவறி தண்ணீருக்குள் விழுந்து விட்டது.

தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பார்... கனிமொழி சொல்கிறார் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பார்... கனிமொழி சொல்கிறார்

அப்போது அப்பகுதியில் நீருக்குள் உலவி கொண்டிருந்த திமிங்கலம் ஒன்று, போன் கீழே விழுந்ததை பார்த்து உடனே நீருக்குள் சென்று வாயில் கவ்வி கொண்டு போனை மீட்டு மேலே எடுத்து வந்தது. இதனை அருகில் இருந்தவர்கள் படம் பிடித்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஏனெனில் நார்வேயில் கடந்த வாரம் பிடிப்பட்ட திமிங்கலம் ஒன்று உளவு பார்ப்பதற்காக ரஷ்யாவால் அனுப்பப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. இதனையடுத்து அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ரஷ்யாவால் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்ட திமிங்கலமும், தண்ணீருக்குள் விழுந்த ஐபோனை எடுத்து வந்து கொடுத்த திமிங்கலமும் ஒன்று தான் என பலரும் கூறி வருகின்றனர். எனினும் நீருக்குள் விழுந்த செல்போனை லாவகமாக மீட்டு வந்து கொடுத்த திமிங்கலத்தின் அக்கறைக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

English summary
The video of a whale returning to a phone fallen into the water in Norway is becoming more viral in social networks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X