For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

12 வருட பழக்கம் சும்மாவா.. பதவிபோன பிறகும் "அதில்" அமர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு.. வைரல் வீடியோ!

Google Oneindia Tamil News

ஜெருசலம்: சுமார் 12 ஆண்டுகளாக இஸ்ரேல் பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும், நாடாளுமன்றத்தில் தவறுதலாகப் பிரதமர் சேரில் அமரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலில் இஸ்ரேல் அதிபரானவர் பெஞ்சமின் நெதன்யாகு. அதன் பிறகு அங்குத் தொடர்ந்து 12 ஆண்டுகளாக அவரே அதிபரா இருந்து வருகிறார்.

இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை

அங்குக் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 4 முறை தேர்தல் நடந்துள்ளது. இருப்பினும், அதில் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சி உட்பட யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இஸ்ரேல்

இஸ்ரேல்

இதன் காரணமாகப் பல ஆண்டுகளாகக் காபந்து பிரதமராக நீடித்து வந்தார் பெஞ்சமின் நெதன்யாகு. இந்தச் சூழலில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி இஸ்ரேல் நாட்டில் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. அங்கு ஆட்சியைப் பிடிக்க மொத்தமுள்ள 120 தொகுதிகளில் குறைந்தது 61 இடங்களை ஒரு கட்சி கைப்பற்ற வேண்டும். இந்த் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சி 31 இடங்களில் வென்றது. தனிப்பெரும் கட்சியாக உருவானபோதும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெற்றி பெற முடியவில்லை,

கைகோர்த்த 8 கட்சிகள்

கைகோர்த்த 8 கட்சிகள்

இதையடுத்து பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அங்குள்ள எட்டு பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றாகக் கைகோர்த்தன. யேஷ் அதிட், காஹோல் லாவன்- புளூ அண்ட் ஒயிட், இஸ்ரேல் பெய்டெய்னு தொழிலாளர் கட்சி உள்ளிட்ட 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து மெகா கூட்டணி அமைந்தன. இதன் மூலம் அவர்களால் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்ற முடிந்தது. எதிர்க்கட்சிகள் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது.

பிரதமர் சேர்

பிரதமர் சேர்

அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 8 கட்சிகளைக் கொண்ட கூட்டணி பெரும்பான்மையை நிரூபித்தது. பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு நேற்று நாடாளுமன்றம் கூடியது. அப்போது நாடாளுமன்றத்திற்கு வந்த பெஞ்சமின் நெதன்யாகு, பழக்க தோஷத்தில் பிரதமரின் சேரில் வந்து அமர்ந்தார். தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அவர் முற்றிலுமாக மறந்துவிட்டார்.

தவறான சேர்

தவறான சேர்

அங்கிருந்த சிலர், அவர் தவறான சேரில் அமர்ந்துள்ளதை நினைவுபடுத்தினர். இதையடுத்து தனது தவறை உணர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமரின் சேரில் இருந்து எழுந்து, தனக்கு ஒதுக்கப்பட்ட சேரில் அமர்ந்தார், தற்போது இஸ்ரேல் பிரதரமார யமினா கட்சியின் தலைவரான நப்தாலி-பென்னட் (49) உள்ளார். சுழற்சி முறையில் 8 கூட்டணிக் கட்சிகளுக்கும் பிரதமர் பதவி அளிக்க அனைவரும் ஒப்புக் கொண்டனர். தற்போது புதிதாகப் பதவியேற்றுள்ள இஸ்ரேல் அமைச்சரவையில் 9 பெண் அமைச்சர்கள் உட்பட 27 பேர் இடம்பிடித்துள்ளனர்.

English summary
Benjamin Netanyahu sat in the prime minister’s chair. He forgets that he had just been removed as Israeli PM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X