For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குப்பைகளை உண்பது.. ஒரு நாள் விட்டு மறுநாள் உணவு... சிரியா குழந்தைகளின் அவல நிலை!

ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள சிரியர்கள் உணவு தட்டுப்பாட்டால் குப்பைகளை உண்ணுவதும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு உண்பதும் என்ற நிலையில் உள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டமாஸ்கஸ்: ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் கிழக்கு டமாஸ்கஸ்ஸில் உணவுத் தட்டுப்பாடு நிலவுவதால் அங்குள்ள குழந்தைகள் உணவு கிடைக்காமல் குப்பைகளை உணவாக உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டில் கிழக்கு டமாஸ்கஸ் பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட போரினால் அந்த பகுதியை ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

அந்த பகுதியில் 1,74,500 பேர் உள்ளனர். அவர்கள் அவசரகாலத்தில் சமாளிக்கும் உத்திகளை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 விலங்குகளுக்கான உணவு

விலங்குகளுக்கான உணவு

இதுகுறித்து ஐ.நா.வின் உலக உணவு திட்டம் அளித்துள்ள அறிக்கையில் கூறுகையில், காலாவதியான உணவை உட்கொள்ளுதல், விலங்குகளுக்கு அளிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவது, சாப்பிடாமல் நாட்களை கடத்துவது, யாசித்தல், உணவுக்காக அதிக ரிஸ்க் எடுப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபடுகின்றனர்.

 உணவில்லாமல் மயக்கம்

உணவில்லாமல் மயக்கம்

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உணவில்லாமல் மயங்கி விழும் நிலையும் ஏற்படுகிறது. டவுமா பகுதியில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் பசியால் பலியாகிவிட்டனர்.

 உணவுக்கு தட்டுப்பாடு

உணவுக்கு தட்டுப்பாடு

அண்மையில் நடந்த மோதலால் விநியோகிக்கப்பட்ட உணவு பொருள்கள் சேதமடைந்தன. இதனால் மிகவும் மோசமான தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. டமாஸ்கஸ் கிழக்கு கவுடாவிலிருந்து வெறும் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. அங்கு 700 கிராம் பிரட் 85 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

 கோரச் சம்பவங்கள்

கோரச் சம்பவங்கள்

குழந்தைகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. இன்று உணவில்லாமல் பட்டினி கிடப்பதை நினைத்து குழந்தைகள் அழும் கோர சம்பவங்களும் நடைபெறுகிறது என்று அறிக்கை கூறுகிறது.

English summary
Syrians in the besieged enclave of Eastern Ghouta are so short of food that they are eating trash, fainting from hunger and forcing their children to eat on alternate days, the UN World Food Programme said in a report on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X