For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்கள் சோஷியல் மீடியா கணக்கை வேவு பார்க்கும் சீனர்கள்: உஷார் மக்களே உஷார்

By Siva
Google Oneindia Tamil News

பெர்லின்: சீனர்கள் சமூக வலைதளங்களில் போலி கணக்கு துவங்கி மக்களை கண்காணிப்பதாக ஜெர்மனி உளவுத் துறை எச்சரித்துள்ளது.

சீன உளவுத் துறை அதிகாரிகள் சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள் துவங்கி தகவல் சேகரிப்பதாக ஜெர்மனியை சேர்ந்த உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Beware, the Chinese are viewing your profile on social media

லிங்கட்இன் உள்பட சமூக வலைதளங்களில் போலிக் கணக்கு துவங்கி மக்களின் விருப்பு, வெறுப்புகள், அரசியல் கருத்து உள்ளிட்ட தகவல்களை சீன உளவுத் துறையினர் சேகரிப்பதாக கூறப்படுகிறது.

லிங்கட்இன் மூலம் போலிக் கணக்கு துவங்கிய சீனர்கள் 10 ஆயிரம் ஜெர்மானியர்களை தொடர்பு கொண்டு வேலை இருப்பதாக கூறியது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த தகவலை சீன வெளியுறவுத் துறை ஏற்க மறுத்துள்ளது. ஜெர்மன் நிறுவனங்கள் குறிப்பாக அரசு துறைகள் இது போன்று செய்யாமல் பொறுப்புடன் பேச, நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

English summary
Fake social media accounts created by the Chinese have come under the scanner of the intelligence agencies. Chinese intelligence officials are creating fake social media accounts to gather information, the German domestic intelligence has reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X