For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவிடம் வாலாட்டிய கையோடு எல்லையில் மூக்கை நுழைக்கும் சீனா - பூட்டான் கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

திம்பு: பூட்டானின் சக்தேங் வனவிலங்கு சரணாலயத்தை தங்களது நாட்டின் ஒருபகுதியான சீனா உரிமை கோருவதற்கு பூட்டான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனா அண்டை நாடுகள் அனைத்துடனும் எல்லை பிரச்சனைக்காக மோதிக் கொண்டிருக்கிறது. தென்சீனா கடலில் பல நாடுகளுடன் எல்லை விவகாரத்தில் மல்லுக் கட்டுகிறது சீனா.

இந்தியாவுடன் காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில் மோதல் போக்கையும் போரையும் தூண்டி வருகிறது சீனா. தற்போது பூட்டானுடன் சீனா எல்லை மோதல் கோதாவில் குதித்திருக்கிறது.

பூட்டான் உட்பட பிற நாட்டின் ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிக்க இந்தியா முயற்சிக்கவில்லை: நிதின் கட்காரி பூட்டான் உட்பட பிற நாட்டின் ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிக்க இந்தியா முயற்சிக்கவில்லை: நிதின் கட்காரி

இந்தியா பூட்டான்

இந்தியா பூட்டான்

பூட்டான் நாடானது இந்தியா, சீனா இடையே உள்ள சின்னஞ்சிறிய நாடு. இதன் இறையாண்மையை மதித்து அதன் எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டிருக்கிறது. அண்டை நாடு என்பதற்காக ஆக்கிரமிப்பு முயற்சியை ஒருபோதும் நாம் மேற்கொண்டது இல்லை. ஆனால் சீனாவோ, வழக்கம் போல இந்த பகுதி என்னுடையது; அந்த பகுதி எங்களுடையது என முட்டிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பூட்டானின் டோக்லாம் பீடபூமியை சீனா கைப்பற்ற முயற்சித்தது. இதனை இந்திய வீரர்கள் அர்ப்பணிப்புடன் போராடி முறியடித்து சீனாவை மூக்குடைத்தனர்.

கால்வன் பள்ளத்தாக்கு

கால்வன் பள்ளத்தாக்கு

தற்போது இந்தியாவின் கால்வன் பள்ளத்தாக்கை கைப்பற்ற முனைகிறது சீனா. சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிரான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த மோதல் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்திவிட்டு திரும்பியிருக்கிறார்.

பூட்டான் - சீனா அறிக்கை

பூட்டான் - சீனா அறிக்கை

இந்நிலையில் திடீரென பூட்டானுடன் தங்களுக்கு எல்லை பிரச்சனை இருக்கிறது என அறிவித்திருக்கிறது சீனா. பூட்டானுடனான எல்லை விவகாரம் குறித்து சீனா தற்போதுதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஆனால் சீனாவின் இந்த அறிவிப்பை பூட்டான் மிக கடுமையாக எதிர்த்து வருகிறது.

சக்தேங் சரணாலயம் யாருக்கு?

சக்தேங் சரணாலயம் யாருக்கு?

பூட்டானின் சக்தேங் வனவிலங்கு சரணாலயப் பகுதி தங்களுக்கு உரியது என்கிறது சீனா. ஆனால் பூட்டானோ, சக்தேங் வனவிலங்கு சரணாலயம் என்பது எங்கள் தேசத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி. அதை ஒருபோதும் விட்டுத்தரவே மாட்டோம் என திட்டவட்டமாக கூறியிருக்கிறது.

Recommended Video

    China- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்... Predator-B திட்டத்தை எடுத்த India
    சீனா எல்லையில் பதற்றம்

    சீனா எல்லையில் பதற்றம்

    இதுவரை பூட்டானும் சீனாவும் எல்லை பிரச்சனை குறித்து பல முறை பேச்சுவார்த்தைகல் நடத்தி இருக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைகளின் போது எல்லாம் சுட்டிக்காட்டாத பல பகுதிகளை இப்போது பிரச்சனைக்குரியதாக்க சீனா முயற்சிக்கிறது. இந்தியாவைத் தொடர்ந்து பூட்டானுடனும் மோதலுக்கு சீனா தயாராகிவிட்டது அப்பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Bhutan strongly opposed to China for claim to Sakteng Sanctuary.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X