For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூடான் நாடாளுமன்றத்தில் மோடிக்கு யாரும் கைதட்டக் கூடாது என்று சொல்லியும் கைதட்டியவர்கள்

By Siva
Google Oneindia Tamil News

திம்பு: கை தட்டும் பழக்கம் இல்லாத பூட்டான் மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தி முடித்த உடன் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை பூடான் சென்றார். அவர் பூடான் தலைநகர் திம்புவில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று காலை உரை நிகழ்த்தினார். அவர் இந்தியில் பேச அதை மொழிபெயர்ப்பவர் ஒருவர் பூடான் மொழியில் மொழிபெயர்த்தார்.

Bhutanese clap to make an exception for Modi

மோடி உரையை முடித்தும் அவையின் ஒரு பக்கத்தில் இருந்தவர்கள் கை தட்ட இதைத் தொடர்ந்து அங்கிருந்த விவிஐப்பிக்கள் என்று அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

பூடானில் தீய சக்திகளை விரட்டவே கை தட்டுவார்கள் மற்றபடி யாரையும் பாராட்ட கை தட்டமாட்டார்கள். மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது யாரும் கை தட்டக் கூடாது என்று ஞாயிற்றுக்கிழமையே மீடியா மூலமாக பூடானில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அப்படியும் கைதட்டல்கள் எழுந்தாதல் அவையில் இருந்த பலர் செய்வதறியாது வழித்தனர்.

மோடியின் உரையை கேட்க அவையில் இந்தியா மற்றும் பூடானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள், அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவியரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
People of Bhutan do not clap as a congratulatory gesture as they believe that clapping is done only to ward off evil spirits. But on Monday they made an exception for Prime Minister Narendra Modi who gave a rousing speech at the joint session of Bhutanese parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X