For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை இந்தியா வருகிறார் பூடான் பிரதமர் தோப்ஹய்

Google Oneindia Tamil News

திம்பு: பூடான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய், ஐந்து நாள் அரசு முறை பயணமாக நாளை இந்தியா வருகிறார்.

இந்தியா வரும் தோப்ஹய், கோவாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளும் அவர், " நாகரீக நாடுகளிடம் இருந்து கற்றல்" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். பின்னர் அவர் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், கோவா ஆளுநர் மிரிடுல் சின்ஹா, அம்மாநில முதலமைச்சர் லஷ்க்மிகாந்த் பர்சேகர் ஆகியோர் சந்திக்கின்றனர்.

Bhutanese Prime Minister to visit India tomorrow

தனது 5 நாள் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தோப்ஹய், இறுதியாக நவம்பர் 16-ம் தேதி டெல்லியில் மூத்த தலைவர்களைச் சந்திக்கிறார். பின்னர் நவம்பர் 17-ம் தேதி அவர் பூடான் திரும்புகிறார்.

மோடி பிரதமராகப் பதவியேற்றப் பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக பூடான் சென்றது குறிப்பிடத்தக்கது.

English summary
Bhutan's Prime Minister Tshering Tobgay will visit India from tomorrow to attend a conclave in Goa and meet top Indian leaders, it was announced here today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X