For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மைக்ரோசாப்ட் தலைவர் பதவியிலிருந்து பில்கேட்ஸை அகற்ற முயற்சி?

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் தலைவர் பதவியில் இருந்து பில்கேட்ஸை அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டாளர்கள் 20 பேரில் மூவர் பில்கேட்ஸை தலைவர் பதவியில் இருந்து அகற்றும் லாபிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பில்கேட்ஸ் வசம் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 4.5% பங்குகள் மட்டுமே இருக்கின்றன. 5%-க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் மூன்று முதலீட்டாளர்கள் எப்படியும் பில்கேட்ஸை தலைவர் பதவியில் இருந்து நீக்குவது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

Bill Gates under pressure from investors to step down as Microsoft chairman

தலைவர் பதவியில் பில்கேட்ஸ் தொடர்ந்தும் நீடிப்பதால் புதிய வியூகங்களை வகுக்க முடியாமல் தேக்க நிலை இருக்கிறது என்பது இந்த லாபியிஸ்டுகளின் கருத்து.

அத்துடன் பில்கேட்ஸ் பெரும்பாலும் தமது அறக்கட்டளைக்கே அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார் என்பதும் இவர்களது குற்றச்சாட்டு. தற்போதைய நெருக்கடி தொடருமேயானால் 2018ஆம் ஆண்டுக்குள் அனைத்து பங்குகளையும் விற்றுவிட்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட்டே பில்கேட்ஸ் வெளியேறிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

English summary
Three of the top 20 investors in Microsoft Corp are lobbying the board to press for Bill Gates to step down as chairman of the software company he co-founded 38 years ago, people familiar with matter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X