For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு ஆயுத ஒழிப்பு, மலேரியா ஒழிப்பு, ஏழைகளுக்கு கல்வி... தன் ஆசைகளை பட்டியலிட்ட பில்கேட்ஸ்!

Google Oneindia Tamil News

மெக்சிகோ சிட்டி: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது ஆசைகள் என சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளார்.

'வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை.. என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை.. ' இதெல்லாம் ரோஜாவின் ஆசைகள். ஆனால் கம்ப்யூட்டர் ராஜா பில்கேட்ஸின் ஆசை என்ன தெரியுமா.. அது இதை விட மிகப் பெரியதாக, உயர்ந்ததாகவும் இருக்கிறது.

மலேரியாவை ஒழிக்க வேண்டும், கல்வியை சீரமைக்க வேண்டும், ஏழைகளுக்கு கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும், உயிரி ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள், அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என தனது ஆசைகளைப் பட்டியலிடுகிறார் பில்கேட்ஸ்.

அணு ஆயுத ஆய்வகம்...

அணு ஆயுத ஆய்வகம்...

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், பெருங்கொடையாளருமான பில் கேட்ஸ், தனிப்பட்ட முறையில் வடக்கு மெக்சிகோவில் உள்ள லாஸ் அமலாஸ் தேசிய ஆய்வகத்திற்குச் சென்றிருந்தார். இந்த லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வகம்தான் மெக்சிகோவின் மிகப் பெரிய அணு ஆயுத ஆய்வகமாகும்.

ஆசைகள்...

ஆசைகள்...

இந்த ஆய்வகத்துடன் இணைந்து எச்ஐவிக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பான ஆய்வுப் பணிகளில் பில் கேட்ஸின் கேட்ஸ் பவுண்டேஷன் ஈடுபட்டு வருகிறது. லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வகத்தில் அதன் ஊழியர்களிடையே முக்கால் மணி நேரம் உரையாற்றினார் கேட்ஸ். அப்போதுதான் தனது மன ஆசைகளைக் கொட்டினார்.

அமெரிக்க கல்வித் திட்டம்...

அமெரிக்க கல்வித் திட்டம்...

தனது ஆசைகளாக அவர் பட்டியலிட்டது இவைகளைத் தான்...

*அமெரிக்காவின் கல்வித் திட்டத்தை சரி செய்வது என்பது மலேரியாவை ஒழிப்பதை விட கடினமானது.

அணு ஆயுதங்கள் ஒழிப்பு...

அணு ஆயுதங்கள் ஒழிப்பு...

அதற்கு முன்பாக இந்த உலகிலிருந்து அணு ஆயுதங்கள், உயிரி ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்களை ஒழிக்க நான் ஆசைப்படுகிறேன்.

எய்ட்ஸுக்கு மருந்து...

எய்ட்ஸுக்கு மருந்து...

உலகம் முழுவதும் எச்ஐவி தடுப்பு மருந்துகளைக் கொண்டு சேர்க்க ஆசைப்படுகிறேன்.

கல்வி சீரமைப்பு...

கல்வி சீரமைப்பு...

கல்விக்கான சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எனது அமைப்பு கடும் சவால்களை எதிர்கொள்கிறது என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆயுதம் தயாரிக்க நிதி?

ஆயுதம் தயாரிக்க நிதி?

லாஸ் அலமாஸுடன் வேறு என்ன மாதிரியான தொடர்புகளைப் பேண விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, ஸாரி, நாங்கள் ஆயுதங்கள் தயாரிக்க நிதியெல்லாம் தர முடியாது என்றார் சிரித்தபடி.

முக்கிய விஷயம்...

முக்கிய விஷயம்...

மேலும், அணு ஆயுத ஒழிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று என்றும் பில்கேட்ஸ் குறிப்பிட்டார்

English summary
Microsoft co-founder and philanthropist Bill Gates says eradicating malaria is easier than fixing the United States' education system. But what he really wishes he could do is write a check to eliminate biological, chemical and nuclear weapons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X