For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாளத்தை அச்சறுத்தும் பறவை காய்ச்சல்... 2,000-க்கும் மேற்பட்ட பறவைகள் அழிப்பு!

Google Oneindia Tamil News

காத்மாண்டு: இந்தியாவில் அச்சறுத்தி வரும் நிலையில் பறவை காய்ச்சல் நேபாளத்திலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக 1,865 வாத்துகள், 622 காடைகள், 32 கோழிகள், 25 வான்கோழிகள் ஆகிய பண்ணை பறவைகள் கொல்லப்பட்டன

Bird flu threatens Nepal, kills more than 2,000 birds

உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மனிதர்களை அச்சறுத்தி வரும் நிலையில் பறவை காய்ச்சலும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் 9 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேபாளத்திலும் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.

சசிகலாவை வரவேற்க தயாராகும் பரபர ரிசார்ட் - சென்னை திரும்புவது எப்போது?சசிகலாவை வரவேற்க தயாராகும் பரபர ரிசார்ட் - சென்னை திரும்புவது எப்போது?

இது இதுதொடர்பாக அந்த நாட்டு வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், தலைநகர் காத்மண்டுவில் தர்கேஷ்வர் நகராட்சி பகுதியிலுள்ள பண்ணை ஒன்றில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1,865 வாத்துகள், 622 காடைகள், 32 கோழிகள், 25 வான்கோழிகள் ஆகிய பண்ணை பறவைகள் கொல்லப்பட்டன. 542 முட்டைகள் மற்றும் 75 கிலோ கோழி தீவனம் ஆகியவையும் அழிக்கப்பட்டன.

பறவை பண்ணையில் நடந்த பி.சி.ஆர். பரிசோதனை அடிப்படையில் தொற்று உறுதியானது என தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து, பண்ணை பறவைகளிடையே சந்தேகத்திற்குரிய வகையில் ஏதேனும் முரணாக தென்பட்டால் அதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி பண்ணை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளை வலியுறுத்தி உள்ளோம் என்று கூறியுள்ளது.

English summary
Outbreaks appear to be exacerbated during bird flu in India and Nepal. As a result, 1,865 ducks, 622 quails, 32 chickens and 25 turkeys were killed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X