For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டைனசோருக்கு பாராசூட் கட்டினா எப்படி இருக்கும்.. அப்படி ஒன்று இருந்ததாம்... சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்

Google Oneindia Tamil News

லண்டன்: உலகில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக கருதப்பட்ட டைனோசர்கள் இனத்தில் கிட்டதட்ட பலநூறு வகைகள் உள்ளன என்று தொல்பொருள் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தொல்லியல் மற்றும் உயிரியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி வாழ்ந்து, மறைந்த டைனோசர்களின் படிவங்களின் மூலமாக பலநூறு இனங்களின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதன்மூலமாக கதைகளிலும், புராணங்களிலும் மட்டுமே மேற்கோள் காட்டப்பட்ட வித்தியாச விலங்குகள் உண்மையிலும் இருந்தது அப்பட்டமாகி உள்ளது.

பறக்கும் டைனோசர் இனம்:

பறக்கும் டைனோசர் இனம்:

முன்னங்கால் மற்றும் பின்னங்கால்களில் சிறகுகள் முளைத்த பன்னிரண்டரை கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட, பறக்கும் சக்தி படைத்திருந்த அரிய வகை டைனசோர் இனத்தின் படிமத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாயில் நுழையாத பெயர்:

வாயில் நுழையாத பெயர்:

இந்த 12 கோடி வருடத்திற்கு முந்தைய டைனோசர் இனமானது "ஷங்க்யுராப்டர் யாங்கி" என்ற பெயரை உடையது. இதனுடைய படிமமானது சீனாவின் வடகிழக்குப் பகுதியில் இருந்து 2012 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

கண்டறிந்த விவசாயிகள்:

கண்டறிந்த விவசாயிகள்:

"அங்குள்ள விவசாயிகளால் இந்த படிமங்கள் கண்டறியப்பட்டன" என்று டைனோசர்கள் ஆராய்ச்சி கழகம் மற்றும் அருங்காட்சியகத்தின் இயக்குனர் லூயிஸ் கூறியுள்ளார்

பாரசூட் வால் பகுதி:

பாரசூட் வால் பகுதி:

இதன் உடலில் அமைந்திருந்த வால் பகுதியை பார்த்து வியந்த அவர்கள், இந்த அரிய வகை டைனசோர்கள் வேகமாக பறந்து வரும் வேளையில் பத்திரமாக தரையிறங்குவதற்கு வசதியாக இந்த வால் "பாராசூட்" போல் பயன்பட்டிருக்கக் கூடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னோர்கள் புத்திசாலிகள்:

முன்னோர்கள் புத்திசாலிகள்:

இதனால்தான் என்னவோ நமது முன்னோர்கள் இவற்றின் தடயங்களாக யாழி, சரபம் போன்ற உருவங்களை சிலைகளில் வடித்து வைத்துள்ளனர் போல.

English summary
The largest "four-winged" dinosaur known has been found, and this predator has the longest feathers yet outside of birds, researchers say. This new finding yields insights on how dinosaurs may have flown, the scientists added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X