For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நாயகனா?.. இட்ரிஸ் எல்பாவிற்கு எதிர்ப்பு.. ஹாலிவுட்டில் நிறவெறி!

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன்முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்த நடிகர் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

By Rajeswari
Google Oneindia Tamil News

நியூயார்க்: உலக சினிமா வரலாற்றில் உலகில் இருக்கும் எல்லா ரசிகர்களும் விரும்பும் ஒரு கதாபாத்திரம் என்றால் பிரிட்டிஷ் உளவாளி கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம்தான். இந்த கதாபாத்திரத்தில் முதன்முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்த நடிகர் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என காலத்திற்கு தகுந்தவாறு முன்னணியில் இருக்கும் பிரபலமான நடிகர்கள் நடித்தனர்.

இதற்கு முன் வெளியான நான்கு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் டேனியல் கிரேக் நடித்துள்ளார். தற்போது 25வது ஜேம்ஸ் பாண்ட் படம் உருவாகவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் இயக்குனர் டேனி பாயல் இயக்கவுள்ளார்.

 யார் அடுத்த ஜேம்ஸ் பாண்ட்?

யார் அடுத்த ஜேம்ஸ் பாண்ட்?

ஜேம்ஸ் பாண்ட் - 007 கதாபாத்திரம் மக்களிடம் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த நிலையில், அடுத்த 25வது ஜேம்ஸ்பாண்ட் யார் என்ற மில்லியன் டாலர் கேள்வி சினிமா ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. மக்கள் அந்த அடுத்த ஆக்க்ஷன் ஹீரோ யாராக இருக்கும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்துக்கான ரேஸில், ஹாலிவுட் நடிகர்கள் பலரின் பெயர்கள் இருந்தாலும், அந்த இடத்தை வென்றவர் இட்ரிஸ் எல்பா ஆவார்.

யார் இந்த இட்ரிஸ் எல்பா

யார் இந்த இட்ரிஸ் எல்பா

43 வயதை கொண்ட இட்ரிஸ் எல்பா மண்டேலா, பசிபிக் ரிம் படங்களின் மூலம் ஒரு நல்ல நடிகராக உலகத்திற்கு அறிமுகமானவர். ஆரம்பகாலத்தில் படங்களில் துணை நடிகராக நடித்த இவர் தனது நடிப்பு திறமையால் கதாநாயகனாக தற்போது வளம் வருகிறார். இந்நிலையில் , "கறுப்பின நடிகர் ஒருவர் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கச் சரியான நேரம் இதுவே" என்று இட்ரிஸ் எல்பா கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அவெஞ்சர்ஸ் மற்றும் தோர் வரிசையில் வெளியான படங்களில், முக்கியமான கதாபாத்திரத்தில் இட்ரிஸ் எல்பா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் எதிர்ப்பு

மக்கள் எதிர்ப்பு

ஜேம்ஸ்பாண்டின் அடுத்த படத்தில் இட்ரிஸ் எல்பா நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதையடுத்து மக்கள் பலரும் பல விதமான கருத்துக்களை வெளியிட்டனர். பெருபாலானோர் இனவெறியை தூண்டும் விதமாகவே, கருத்து தெரிவித்தனர். கறுப்பினத்தவர் ஒருவர் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியற்றவர் என்றும், இவர் மிகவும் வயதானவர் என்றும் மக்கள் சமூக வலைத்தளங்களில் வெறுப்பு தெரிவித்தனர்.

தயாரிப்பாளரின் ஆதரவு.

தயாரிப்பாளரின் ஆதரவு.

இட்ரிஸ் எல்பா ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிப்பதற்கு மக்கள் தெரிவிக்கும் எதிர்ப்பை, மறுத்து ஆதரவாக பேசியுள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளர். அவர் கூறியதாவது, ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ஒரு ஸ்காட்டிஷ் தான் போலீஸாக நடிக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. அதே போல் இட்ரிஸ் எல்பாயை விட வயதானவர்கள் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் இதற்குமுன் நடித்துள்ளனர். அதனால் நீங்கள் இவருக்கு அளிக்கும் கரணங்கள் மிகவும் நகைச்சுவையாக உள்ளது, என்று கூறினார்.

கதையும் சினிமாவும் வேறு

கதையும் சினிமாவும் வேறு

மேலும் அவர் கூறுகையில் ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி எழுதிய போது எனக்கு தெரிந்த சில போலீஸ் அதிகாரிகள், கடற்படை நிபுணர் போன்றோரை மனதில் வைத்து எழுதினேன்.ஜேம்ஸ்பாண்ட் நாவல்களில் இருக்கும் கதாபாத்திரத்தை கொண்டு சினிமா கதைகள் அமைக்கப்படுவது இல்லை என்பதுதான் உண்மை. தவிர ஜேம்ஸ் பாண்டாக நடிப்பவர் இந்த தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று எதிலும் குறிப்பிடவில்லை. ஜேம்ஸ்பாண்ட் புத்தக கதையில் உள்ள நிலா நிற கண்கள், சிவப்பு நிறம் கொண்ட ஸ்காட்டிஷ் ஆண் என அதில் வருபவை எல்லாமே நீங்க பார்க்கும் சினிமாவில் வரவில்லை, என்பதை நீங்கள் உணர வேண்டும்

இயக்குனர் எதற்கு ?

இயக்குனர் எதற்கு ?

மேலும் புத்தகத்தின் கதையில் இல்லாத பல தொழிற்நுட்பம் சார்ந்த விஷயங்களும் சினிமாவில் வடிவமைக்க படுகின்றன, மேலும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப ஜேம்ஸ் பாண்ட் தோற்றமும் வளர்ச்சி பெற்றது. அதனால் கதையும், கதையில் வரும் கதாபாத்திரத்தையும், முடிவு செய்யும் உரிமை இயக்குனருக்கு தான் உண்டு. மக்களே எல்லாவற்றையும் முடிவு செய்தல், பின்பு இயக்குனர் எதற்கு?

English summary
Black man as James Bond: Racist comment against Idris Elba.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X