For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எகிப்தில் வெடிகுண்டு விபத்து... தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 14 பேர் படுகாயம்

Google Oneindia Tamil News

கெய்ரோ: கீஸா பிரமிடு என்ற இடத்தில் குண்டு வெடித்ததில் சுற்றுலா பேருந்தில் சென்ற 14 பேர் படுகாயமடைந்தனர்.

சுற்றுலா பேருந்தில் சென்ற 14 பேரும் தென்ஆப்பரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்று அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்பு நிகழ்த்தியது யார் என்பது குறித்து, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Blast hits Egypt tourist bus, 17 South Africans injured say security

இதற்கு முன், கடந்தாண்டு டிசம்பர் மாதம் வியட்நாமைச் சேர்ந்த 14 சுற்றுலா பயணிகளுடன் காசா பிரமிடு பகுதியைச் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் வியட்நாமைச் சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதல் போல், எகிப்தில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பாக காப்டிக் தேவாலயத்தில் தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில், 48 பேர் பலியானார்கள்.

 எக்ஸிட் போலை நம்பாதீங்க.. பின்னணியில் இப்படி ஒரு சதி இருக்கு.. மமதா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு எக்ஸிட் போலை நம்பாதீங்க.. பின்னணியில் இப்படி ஒரு சதி இருக்கு.. மமதா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு

சமீபகாலமாக, தீவிரவாதம் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், எகிப்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறி வைத்து, அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Blast hits Egypt tourist bus, 17 injured say security, medical sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X