For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அசத்தல்.. கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் ரத்தத்தில் இருந்து மருந்து.. சீனாவிலிருந்து குட்நியூஸ்?

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர்கள் உடலில் அவற்றுக்கு எதிராக வளர்ந்திருக்கும் பிளாஸ்மா மற்றவர்களை குணப்படுத்த உதவிகரமாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Recommended Video

    கொரோனாவை அடுத்து சீனாவில் ஹண்டா வைரஸ்... உண்மை என்ன?

    இதேபோன்ற சிகிச்சை நடைமுறையை, சீன மருத்துவர்கள் கையில் எடுத்துள்ளனர். இதை சோதித்து பார்க்க அமெரிக்க மருத்துவர்களும், அந்த நாட்டு நாட்டு மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    இது மிகப் பழங்காலம் நடைமுறைதான் என்றும், பல்வேறு தொற்று நோய்களுக்கு சிகிச்சை தர இந்தமுறை வெகுவாக பயன்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவர்கள்.

     ஆன்டிபாடிகள் உருவாகின

    ஆன்டிபாடிகள் உருவாகின

    இந்த முறையில், கொரோனாவை குணப்படுத்த எந்த அளவுக்கு சாத்தியம் என்பது பரிசோதனைகளுக்குப் பின் தெரியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
    ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட கிருமியால் பாதிக்கப்படுகையில், உடல் அந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராட ஆன்டிபாடிகள் எனப்படும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புரதங்களை உருவாக்கத் தொடங்குகிறது. அந்த நபர் குணமடைந்த பிறகு, அந்த ஆன்டிபாடிகள் உயிர் பிழைத்தவர்களின் ரத்தத்தில் மிதக்கின்றன. குறிப்பாக பிளாஸ்மா எனப்படும் இரத்தத்தின் திரவ பகுதியில் பல மாதங்கள், சில நேரங்களில் பல ஆண்டுகள் கூட உயிர் வாழ்கின்றன.

     கொரோனா குணமடையுமா

    கொரோனா குணமடையுமா

    புதிதாக நோய்வாய்ப்பட்ட COVID-19 நோயாளிகளுக்கு ஏற்கனவே, உயிர் பிழைத்தவர்களின் ஆன்டிபாடி நிறைந்த பிளாஸ்மாவை உட்செலுத்தி சிகிச்சை வழங்கினால் கொரோனா குணமடையுமா என்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவி வரும் நிலையில் இதுபோன்ற செய்திகள் சற்று நம்பிக்கை தரும் வகையில் உள்ளன.

    வரலாறு

    வரலாறு

    1918 ப்ளூ காய்ச்சல் தொற்றின்போது, தட்டம்மை மற்றும் பாக்டீரியா நிமோனியா உள்ளிட்ட ஏராளமான பிற தொற்றுகளுக்கு எதிராக மிகவும் பிரபலமானதாக இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டன. சமீபகாலத்தில், எபலோ, சார்ஸ் போன்ற நோய்களுக்கு எதிராகவும், இதுபோன்ற சிகிச்சை முறை பலனை அளித்தது.

     நல்ல நடைமுறை

    நல்ல நடைமுறை

    இது "கற்காலத்திற்குத் திரும்புவது" போல் தோன்றலாம், ஆனால் தப்பிப்பிழைத்தவர்களின் ரத்தத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதற்கு நல்ல அறிவியல் காரணம் இருக்கிறது என்று செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் டாக்டர் ஜெஃப்ரி ஹென்டர்சன் கூறுகிறார். ஒரு எச்சரிக்கையும் இதில் உள்ளது. வழக்கமான பிளாஸ்மா மாற்றங்கள் மருத்துவத்தில் முக்கிய இடம் பிடித்தாலும், ​​அவை மிகவும் அரிதாக நுரையீரல் பாதிப்பை பக்க விளைவாக ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

    English summary
    Hospitals are gearing up to test if a century-old treatment for COVID-19, using blood donated from patients who’ve recovered.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X