For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

16 மணி நேர தேடுதல் வேட்டை... டிஸ்னி ரெசார்ட்டில் முதலை இழுத்துச் சென்ற 2 வயது சிறுவனின் உடல் மீட்பு

Google Oneindia Tamil News

புளோரிடா: டிஸ்னி உல்லாச விடுதியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 2 வயது சிறுவனின் உடலை, 16 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின் நீருக்கடியில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர்.

அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாகாணத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விடுமுறைக்காக புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் உள்ள டிஸ்னி உல்லாச விடுதிக்கு சென்றிருந்தனர்.

Body of toddler snatched by alligator found in Orlando Disney resort

நேற்று முன்தினம் அங்குள்ள கடற்கரையில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களது 2 வயது மகனை முதலை ஒன்று தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு கடற்கரையில் இருந்தவர்கள் திடுக்கிட்டனர். விரைந்து சென்று குழந்தையைக் காப்பாற்ற அதன் தந்தை முயற்சி செய்தார். ஆனால், முதலை அச்சிறுவனை இழுத்துக் கொண்டு ஆழ்கடலுக்குள் சென்று விட்டது.

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனைத் தேடும் பணியை முடுக்கி விட்டனர். கடலில் சிறுவனை தேடும் பணியில் 50 போலீசாரும், வனவிலங்கு வல்லுனர்களும் ஈடுபட்டனர்.

சுமார் 16 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின்னர், நீருக்கடியில் இருந்து அச்சிறுவனின் உடலைப் போலீசார் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சோகமான சூழல் நிலவுகிறது.

English summary
Searchers have found the body of a 2-year-old boy who was snatched underwater by an alligator near a Disney World resort in the US city of Orlando, said local police sheriff on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X