For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

506 பேரைக் கடத்திய போகோஹரம் தீவிரவாதிகள்– நைஜீரியாவில் மீண்டும் அட்டகாசம்

Google Oneindia Tamil News

டமாஸக்: நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் 506 சிறார்களைக் கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் வடக்கு பகுதியை கைப்பற்றிய போகோஹரம் தீவிரவாதிகள், அங்கு அரசை அமைப்பதற்காக தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Boko Haram takes 500 children as hostage

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளிக்கூட மாணவிகள் 200 பேரை தீவிரவாதிகள் கடத்திச்சென்றனர். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் நைஜீரிய ராணுவத்துடன் அண்டை நாடான சாத், நைஜர் நாடுகளின் வீரர்களும் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தநிலையில் டமாஸ்க் நகருக்குள் நேற்று முன்தினம் புகுந்த தீவிரவாதிகள் அங்கு இருந்தவர்களை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 50 பேர் இறந்தனர். பின்னர் இளம்பெண்கள், குழந்தைகள் உள்பட 506 பேரை கடத்திச்சென்றனர்.

நைஜர் மற்றும் சாத் ராணுவத்தினர் கடந்த மாதம் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டவர்களை தான் தற்போது மீண்டும் தீவிரவாதிகள் கடத்திச்சென்று உள்ளனர். கடத்தப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது

English summary
Nigeria's government has denied that militant Islamist group Boko Haram abducted 500 people from the north-eastern town of Damasak.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X