For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொலிவியாவில் பயங்கரம்.. கொரோனா சமூகப் பரவலின் கோரம்.. வீடுகள், தெருக்களில் கிடந்த 400 சடலங்கள்!

Google Oneindia Tamil News

சாந்தா குரூஸ்: பொலிவியா நாட்டின் தெருக்களிலும், வீடுகளில் இருந்தும் கடந்த 5 நாட்களில் 400க்கும் மேற்பட்ட சடலங்களை போலீசார் மீட்டுள்ளனர். இவர்களில் 85 சதவீதம் பேர் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகளை கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதித்துள்ளது. நாளுக்கு நாள் மரணங்கள் அதிகரித்து வருகிறது. இதுவரைக்கும் 6.15 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். பொலிவியா நாட்டிலும் இதுவரை 60,991 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 18,875 பேர் குணமடைந்துள்ளனர். 2,218 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா டெஸ்டிங்கில் அமெரிக்காதான் முன்னணி.. இந்தியா கூட நமக்கு அடுத்துதான்.. வம்பிழுக்கும் டிரம்ப்!கொரோனா டெஸ்டிங்கில் அமெரிக்காதான் முன்னணி.. இந்தியா கூட நமக்கு அடுத்துதான்.. வம்பிழுக்கும் டிரம்ப்!

வீடுகளில் சடலங்கள்

வீடுகளில் சடலங்கள்

இந்த நிலையில் அந்த நாட்டில் கணக்கில் வராமல் பெரிய அளவில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தெருக்களிலும், வீடுகளிலும் உயிரிழந்து கிடந்துள்ளனர். இந்த சடலங்களை போலீசார் தற்போது மீட்டுள்ளனர்.

சாந்தா குரூஸில் அதிகம்

சாந்தா குரூஸில் அதிகம்

பொலிவியா நாட்டின் கோச்சபம்பா நகரில் இருந்து 191 சடலங்களையும், லா பாஸ் என்ற இடத்தில் இருந்து 141 சடலங்களையும் ஜூலை 15-20 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் மீட்டுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய நகரமான சாந்தா குரூஸில் இருந்து 68 சடலங்களை மீட்டுள்ளனர். இந்த நகரில் இருந்துதான் அதிகளவில் கொரோனா உயிரிழப்பு நடந்து இருப்பதாக அந்த நாட்டில் இருந்து வெளியேறும் தகவல்கள் கூறுகின்றன.

போலீஸ் அதிகாரி பேட்டி

போலீஸ் அதிகாரி பேட்டி

மீட்கப்பட்ட 400 சடலங்களில் 85 சதவீதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவை. மீதம் வேறு நோயால் இறந்து இருக்கலாம் என்று சாந்தா குரூஸ் போலீஸ் அதிகாரி இவான் ராஜாஸ் தெரிவித்துள்ளார்.

அந்த நாட்டின் கோச்சபம்பா மற்றும் லா பாஸ் ஆகிய இரண்டு நகரங்களும் அதிகளில் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் தொற்று நோய் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தடயவியல் நிபுணர் பேட்டி

தடயவியல் நிபுணர் பேட்டி

தடயவியல் நிறுவனத்தின் இயக்குனர் அன்ட்ரூஸ் புளோர்ஸ் அளித்து இருக்கும் பேட்டியில், ''ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து ஜூலை 19ஆம் தேதி வரை மருத்துவமனையின் வெளியில் இருந்து 3,000 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் கொரோனாவுக்கு பலியானவர்கள் அல்லது சந்தேகிக்கப்படுபவர்கள்'' என்று கூறியுள்ளார்.

கிராமமே தீ வைப்பு

கிராமமே தீ வைப்பு

சீனாவிலும் இதேபோன்று துவக்கத்தில் சடலங்கள் மீட்கப்பட்டதாக தகவல்களும் வீடியோக்களும் வெளியாகி இருந்த நிலையில், பொலிவியா சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் ஒரு கிராமமே தீ வைத்து எரிக்கப்பட்டது என்று உறுதிபடுத்தப்படாத தகவல்கள் பரவி வந்தன. இதற்கு ஏற்றாற்போல் சீனாவும் முதலில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து, பின்னர் அதிகரித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bolivia Corona Death: 400 bodies recovered from streets and homes over a five-days
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X