For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏம்ப்பா நான் ஓடத்தானே வந்திருக்கேன், இப்படியெல்லாம் கேட்டா எப்படி.. டென்ஷனான உசேன் போல்ட்!

Google Oneindia Tamil News

கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க கிளாஸ்கோ வந்துள்ள ஜமைக்கா நாட்டு தடகள வீரர் உசேன் போல்ட்டிடம், செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளால் அவர் நெளிய நேரிட்டது.

கிளாஸ்கோவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தின்போது அவரிடம் காஸா பிரச்சினை, ஸ்காட்லாந்து விவகாரம் என சம்பந்தமே இல்லாமல் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதால் அவர் குழம்பிப் போய் விட்டார்.

நான் இங்கு விளையாடத்தான் வந்திருக்கிறேன். எனக்கு அரசியல் தெரியாது என்று போல்ட் பதிலளித்து சமாளித்தார்.

தடகள சூப்பர் ஸ்டார்

தடகள சூப்பர் ஸ்டார்

உலகத் தடகள போட்டிகளின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் அளவுக்கு பிரபலமானவர் போல்ட். கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

பிரஸ் மீ்ட்டில் கலாட்டா

பிரஸ் மீ்ட்டில் கலாட்டா

கிளாஸ்கோ வந்துள்ள அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள் அவரை குழப்பி விட்டது. கையை மேலே தூக்கி என்ன இப்படியெல்லாம் கேட்கிறீர்கள் என்று தர்மசங்கடத்துடன் கேட்கும் அளவுக்கு செய்தியாளர்கள் குடைந்து எடுத்து விட்டார்கள் போல்ட்டை.

காஸா பிரச்சினை பத்தி சொல்லுங்க

காஸா பிரச்சினை பத்தி சொல்லுங்க

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் இதுவும் ஒன்று - காஸா பிரச்சினை பற்றி என்ன கருதுகிறீர்கள்?.

ஸ்காட்லாந்து தீர்மானம் பத்தி சொல்லுங்க பாஸ்

ஸ்காட்லாந்து தீர்மானம் பத்தி சொல்லுங்க பாஸ்

அதேபோல இன்னொரு கேள்வி - ஸ்காட்லாந்தில் நடந்த தனி நாடு தொடர்பான தீர்மானம் பற்றிக் கருத்துச் சொல்லுங்களேன்...

கில்ட் டிரஸ் போடுவீங்களா போல்ட்?

கில்ட் டிரஸ் போடுவீங்களா போல்ட்?

இன்னொரு கேள்வி - நீங்கள் கில்ட் உடை அணிவீர்களா...? - கில்ட் என்பது ஸ்காட்லாந்து மக்கள் போடும் பாரம்பரிய உடையாகும்.

செல்ஃபி எடுத்துக்குவீங்களா?

செல்ஃபி எடுத்துக்குவீங்களா?

இன்னொரு கேள்வி- எங்களுடன் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்துக்குவீங்களா போல்ட்?

என்னய்யா இதெல்லாம்

என்னய்யா இதெல்லாம்

இப்படி சரமாரியாக சம்பந்தமே இல்லாமல் கேள்விகள் வந்து விழுந்ததால் குழம்பி விட்டார் போல்ட். கையை மேலே தூக்கியும், தலையைப் பிடித்தும், முகத்தை மூடியும், சிரித்தும், குழம்பியும் பல வித முக பாவனைகளை காட்டத் தொடங்கி விட்டார்.

விட மாட்டோம்ல..

விட மாட்டோம்ல..

ஆனாலும் பத்திரிக்கையாளர்கள் விடுவதாக இல்லை. தொடர்ந்து குண்டக்க மண்டக்க கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தனர். இதனால் வெறுமனே சிரித்தபடி அமைதியாக சிறிது நேரம் வேடிக்கை பார்த்தார் போல்ட்.

விளையாட மட்டுமே

விளையாட மட்டுமே

அதன் பின்னர் அவர் பேசுகையில், நான் இங்கு தடகளப் போட்டிகளில் விளையாடத்தான் வந்திருக்கிறேன். ஓட வந்திருக்கிறேன். உண்மையில் எனக்கு அரசியல் தெரியாது. அதுகுறித்து எதுவுமே தெரியாமல் கருத்துக் கூற விரும்பவில்லை என்று பிரஸ் மீட்டை முடித்தார் போல்ட்.

English summary
As one of the sporting world's biggest stars, Usain Bolt would of expected rigorous questioning from the media about his current form or decision to only run the relay at the Glasgow Commonwealth Games. But when the world's fastest man walked into a room full of journalists for his first press conference in Glasgow on Saturday, the line of questioning from journalists would have come as a shock - and rightly so.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X