For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கானிஸ்தான் காபுலில் பயங்கர குண்டுவெடிப்பு.. 40 பேர் பலி.. திருமண விழாவில் அதிர்ச்சி!

ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் நேற்று இரவு நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 40 பேர் பலியானார்கள்.

Google Oneindia Tamil News

காபுல்: ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் நேற்று இரவு நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 40 பேர் பலியானார்கள்.

ஆப்கானிஸ்தானில் உள்ள மேற்கு காபுலில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. டாரன் அபுல் என்ற அரசு விழாக்கள் நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மண்டபத்தில் இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Bomb blast in Afghanistan kills 40 people and More than 100 injured

அதன்படி திருமண மண்டபத்தில் நேற்று இரவு 11 மணிக்கு உடலில் அபாயகரமான குண்டுகளை கட்டிக்கொண்டு உள்ளே நுழைந்த நபர் அதை வெடிக்க வைத்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முதற்கட்ட விவரங்கள் வெளியாகி உள்ளது.

இந்த கொடூரமான தாக்குதலில் 40 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அதேபோல் 100க்கும் அதிகமானோர் குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்துள்ளனர்.

இவர்கள் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த குண்டு வெடிப்பிற்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்திய அந்த மனித வெடிகுண்டு யார் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, அவரின் உடல் அடையாளம் காணப்படவில்லை.

English summary
Bomb blast in Afghanistan kills 40 people and More than 100 injured yesterday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X