For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு.. 8 பேர் பலியான சோகம்!

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மக்கள் பலர் தனி நாடு கேட்டு போராட்டம் செய்து வருகிறார்கள். பல வருடங்களாக இந்த போராட்டங்கள் நடந்து வருகிறது. பலுசிஸ்தானில் இதனால் நிறைய புரட்சி படைகளும், இயக்கங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Bomb blast in Pakistans Balochistan province kills 8 people

இந்த பலுசிஸ்தான் பகுதியில் அவ்வப்போது குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடப்பது வழக்கம். இந்த நிலையில், இன்று மாலை பலுசிஸ்தான் பகுதியில் உள்ள ஷாரா - இ - அடால்ட் என்ற பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. அம்மாவட்ட கோர்ட் அருகே இருந்த பைக் பார்க்கிங் ஒன்றில் இந்த தாக்குதல் நடந்தது.

பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஒரு குழந்தையும் பலியானது குறிப்பிடத்தக்கது. இதில் காயம் அடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Bomb blast in Pakistans Balochistan province kills 8 people

பெரும்பாலும் இந்த குண்டு அங்கிருந்த பைக் ஒன்றில் வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். பாகிஸ்தான் ராணுவம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. பெரும்பாலும் இது தற்கொலைப்படை தாக்குதலாக கூட இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

இந்த குண்டு வெடிப்பு குறித்து அரை மணி நேரத்திற்கு முன்புதான் தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு வந்து குண்டை அகற்றும் முன் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

English summary
Bomb blast in Pakistan's Balochistan province kills 8 people today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X