For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கான் குண்டுவெடிப்பில் 40 பேர் உடல் சிதறி பலி - தலிபான்கள் வெறிச்செயல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்த குண்டு வெடிப்பில் 40 பேர் பலியானார்கள்

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆப்கானில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு

    காபூல்: ஆப்கான் தலைநகர் காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் 40பேர் உடல் சிதறி பலியான நிலையில், இதற்கு தலிபான்கள் தான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் போலீஸ் சோதனைச் சாவடியைக் குறிவைத்து இன்று மதியம் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் நடைபெற்ற சோதனைச் சாவடியின் அருகில் ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், உள்துறை அமைச்சகம் மற்றும் பல நாடுகளின் தூதரங்கள் உள்ளன.

    Bomb blast in Kabul 40 killed

    இதுமட்டுமன்றி மருத்துவமனைகள் மற்றும் சொகுசு ஓட்டல்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் உள்ள வெளிநாட்டவர்களை, குறிப்பாக அமெரிக்கர்களையும், அவர்களின் அலுவலங்களையும் தகர்க்கும் நோக்குடன் இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

    முதற்கட்ட விசாரணையில் தலிபான்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

    English summary
    40 Killed and Over 100 Injured in a bomb blast in Afghanistan. The Bomb Hidden In Ambulance Goes Off Near Embassies In Kabul. Taliban terrorist suspected for the bomb blast
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X