For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எகிப்து நாட்டின் பிரமிடுகள் அருகே குண்டுவெடிப்பு.. இருவர் பலி

Google Oneindia Tamil News

கெய்ரோ: எகிப்து நாட்டின் கிசா பிரமிடுகள் இருக்கும் இடத்துக்கு அருகே குண்டுவெடிக்கப்பட்டதால் அவ்வழியாக வந்த சுற்றுலா பேருந்து சிக்கியதில் 2 பேர் பலியாகிவிட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.

ஒரு சுற்றுலா பேருந்து 14 வியத்நாம் நாட்டினரை எகிப்து நாட்டுக்கு சுற்றுலா அழைத்து வந்தது. அப்போது மரியோதியா பகுதியில் உள்ள பிரமிடுகளை நோக்கி பேருந்து வந்து கொண்டிருந்தது.

Bomb strikes tourist bus near Egypt’s Giza pyramids, kills 2

அப்போது சுவரின் அருகே மறைக்க வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த 2 பேர் பலியாகிவிட்டனர். டிரைவர், கைடு உள்பட 12 பேர் காயமடைந்தனர். எகிப்தில் சினை தீபகற்பம் அருகே ஊடுவியுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளை வெளியேற்றும் முயற்சி அந்நாட்டு ராணுவம் போரிட்டு வருகிறது.

அந்நாட்டில் உள்ள சிறுபான்மை கிறிஸ்துவர்கள் அல்லது தொலைதூரத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு செல்லும் பேருந்துகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது வழக்கம். எனினும் கடந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக வெளிநாட்டு பயணிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவுள்ள நிலையில் இதுபோல் தாக்குதலால் தேவாலயங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

English summary
A roadside bomb hit a tourist bus on Friday in an area near the Giza Pyramids, killing two Vietnamese tourists and wounding 12 others, Egypt’s Interior Ministry said in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X