For Daily Alerts
Just In
”துருவ்” விமான பாதுகாப்பிற்கு ரூ.500 கோடி ஒப்பந்தம் – தென் ஆப்ரிக்காவுடன் கையெழுத்திட்ட இந்தியா
ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுடன் ரூபாய் 500 கோடி அளவிலான ராணுவ ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
இது குறித்து மத்திய அரசு வெளியி்ட்டுள்ள செய்தி குறி்ப்பில், இந்தியாவின் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமான எச்.ஏ.எல் தயாரிக்கும் "துருவ்" இலகு ரக விமானங்களில் நவீன பாதுகாப்பு சாதனங்களை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக தென் ஆப்ரிக்காவின் சாப் கிரின்டெக் ராணுவ நிறுவனத்திற்கும் இடையே சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இத்திட்டத்திற்கு தேவையான தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள், பாதுகாப்பு சாதனங்கள் தென் ஆப்ரிக்க தலைநகர் ஜோகன்ஸ் பர்க்கிற்கு அருகே உள்ள செஞ்சூரியனில் தயாரிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என சாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.