For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துறைமுகங்கள், சாலைகள், சுரங்க பாதைகள்..எல்லாம் சரி.. பாலஸ்தீனத்தின் எதிர்காலம் என்னவாகும்?

Google Oneindia Tamil News

ஜெருசலேம்: அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் பாலஸ்தீன அமைதி திட்டத்தில் மக்களின் சுதந்திரமான நடமாட்டங்களை உறுதி செய்யும் வகையில் சாலைகள், பாலங்கள், சுரங்க வழித்தடப் பாதைகள் அமைத்தல் ஆகியவை குறித்தும் இடம்பெற்றுள்ளன.

காஸா முதல் மேற்கு கரை வரையில் சுமார் 34 கி.மீ தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுமாம். உலகத்திலேயே 6-வது நீளமான சுரங்கப் பாதை இதுவாகும்.

Borders, bridges, tunnels of the Trump peace plan for Palestinian state

ஏற்கனவே சுவிஸ், சீனா, தென்கொரியா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இத்தகைய சுரங்க வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரியாவும் ஸ்பெயினும் குறுகிய தூர சுரங்க பாதைகள் அமைத்துள்ளன.

ஆனால் இந்த சுரங்க வழித்தடத்தை யார் அமைப்பது? இதற்கான நிதியை யார் செலவு செய்வது என்கிற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதேபோல் மேற்கு கரையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளை இணைக்கும் சிறப்பு சாலைகளை உருவாக்கும் அம்சங்களும் இந்த அமைதி ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே ஜெருசலேமை இணைக்கக் கூடிய எண் 443 சாலையை ஒப்பிடக் கூடியதாக இப்புதிய சாலைக்கான பரிந்துரை வெளிப்படுகிறது.

 கதை முடிந்தது.. இதோ உங்கள் சுதந்திரம்.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்டு மாணவர்களை சுட்ட ராம் பகத் கோபால் கதை முடிந்தது.. இதோ உங்கள் சுதந்திரம்.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்டு மாணவர்களை சுட்ட ராம் பகத் கோபால்

ஏற்கனவே மேற்கு கரையில் இஸ்ரேல் இது போன்ற சாலைகளை அமைத்திருக்கிறது. இப்பகுதியில் 60 முதல் 100 கி.மீ வரையில் இத்தகைய சாலைகள் அமைக்கப்பட உள்ளன. காஸா முதல் வேளளாண் மற்றும் தொழில்நுட்பப் பூங்காக்கள் வரையிலும் இதேபோல் இணைப்பு சாலைகள் உருவாக்கப்படும். இஸ்ரேலின் நெகேவ் தொழிற்சாலை மண்டலங்களைப் போல பாலஸ்தீனத்திலும் உருவாக்கப்படும். ஆனால் இத்தகைய தொழிற்சாலை மண்டலங்களை கண்காணிப்பதும் பாதுகாப்பதும் யார் என்கிற கேள்வி எழுகிறது. இத்தகைய தொழில் மண்டலம் பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தால் அது இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

ஆஷ்டோட் மற்றும் ஹைபா துறைமுகங்கள் குறித்தும் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்த பேசுகிறது. இதில் ஆஷ்டோட் துறைமுகம் சாத்தியமானது எனப்படுகிறது. ஆனால் ஹைபா துறைமுகத்தை பாலஸ்தீனம் எப்படி கையாளும் என்கிற புரிதல் எதுவும் இல்லை. பாலஸ்தீனத்துக்குள் ஏராளமான இஸ்ரேலிய குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருங்கிணைக்க இஸ்ரேல் சாலைகளை அமைத்தால் பாலஸ்தீனியர்களின் சுதந்திர நடமாட்டம் கேள்விக்குறியாகும். தற்போதைய அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தமானது, பாலஸ்தீன தேசத்துக்குள் இஸ்ரேல் நாட்டை இயங்க அனுமதிப்பதாக இருக்கிறது.

அதாவது விமான நிலையம், துறைமுகங்கள் எதுவும் இல்லாத ஒரு நாடாக பாலஸ்தீனம் உருவாகும். தென்னாப்பிரிக்காவின் லெசோதோ அல்லது இத்தாலியின் வாடிகனைப் போல பாலஸ்தீனம் உருவாகும். மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் எப்படி துண்டிக்கப்பட்ட இரு தேசங்களாக இருந்ததோ அதைப் போல பாலஸ்தீனத்தின் நிலையும் உருவாகும் என கவலை தெரிவிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
US Vision for Peace plan was forwarded by the Trump administration envisions a complex series of roads, borders, bridges and tunnels to make a future Palestinian state.,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X