For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போர்க்குற்றவாளி: சர்வதேச கோர்ட்டில் விஷம் குடித்து மாண்ட போஸ்னியா மாஜி ராணுவ தளபதி ப்ரால்ஜக்!

சர்வதேச நீதிமன்றத்தில் போஸ்னியா முன்னாள் ராணுவத் தளபதி விஷம் குடித்து தற்கொலை செய்து தற்கொலை செய்து கொண்டார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

தி ஹேக்: போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால், சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு போஸ்னியா முன்னாள் ராணுவத் தளபதி ஸ்லோபோதன் ப்ரால்ஜக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

போஸ்னியா நாட்டில் கடந்த 1992 - 95ம் ஆண்டுகளில் போர் நடந்தது. அப்போது குறிப்பிட்ட இன மக்களை படுகொலை செய்ததாக புகார் எழுந்தது. இதில் போஸ்னியா நாட்டின் ராணுவத் தளபதியான ஸ்லோபோதன் ப்ரால்ஜக் உள்ளிட்ட ஆறு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

Bosnian war Criminal Dies in International Court in front of Judge by drinking Poison

இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் ப்ரால்ஜக் உள்ளிட்ட 6 பேரும் போர்க்குற்றவாளிகள் என்று அறிவித்தது. இதனை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கிற்கான விசாரணை நேற்று நடந்தது.

இந்நிலையில், நேற்று கோர்ட்டில் ஆஜரான ப்ரால்ஜக், நீதிபதி விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போதே தனது உடையில் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்துக் குடித்தார். நீதிபதி முன்னிலையிலேயே விஷத்தை எடுத்த ப்ரால்ஜக், தான் குற்றமற்றவன் இல்லை என்றும், உங்களுடைய தீர்ப்பை நான் ஏற்க முடியாது என்று சொன்னபடியே விஷத்தைக் குடித்தார்.

உடனடியாக நீதிமன்றத்தை ஒத்திவைத்த நீதிபதி, ப்ரால்ஜக்கை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி போலீஸாருக்கு வலியுறுத்தினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ப்ரால்ஜக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

English summary
Former Bosnian war Criminal Died in International Court infront of Judge by drinking Poison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X