For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யு.எஸ்.: நடுவானில் உயிர் இழந்த கேப்டன், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய துணை விமானி

By Siva
Google Oneindia Tamil News

பாஸ்டன்: அமெரிக்காவில் பீனிக்ஸில் இருந்து பாஸ்டன் சென்ற விமானத்தின் கேப்டன் திடீர் என்று இறந்துவிட்டதால் துணை விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸில் இருந்து விமானம் ஒன்று 147 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.55 மணிக்கு மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பாஸ்டன் நகருக்கு கிளம்பியது.

Boston-bound airline pilot dies; co-pilot lands safely in NY

விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் கேப்டனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிர் இழந்தார். இதையடுத்து துணை விமானி விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இரவு 12.30 மணிக்கு சிரகுஸில் அவசரமாக தரையிறக்கினார். அவர் விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கேப்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

விமானம் தரையிறங்கிய பிறகு தான் கேப்டன் இறந்த செய்தி அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. துணை விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு 147 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார். முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு 247 பேருடன் சென்ற கான்டினென்ட்டல் ஏர்லைன்ஸ் விமானத்தின் கேப்டன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.இதையடுத்து துணை விமானி விமானத்தை நியூவார்க் லிபர்ட்டி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1994ம் ஆண்டில் இருந்து இதுவரை அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்த 7 விமானிகள், ஒரு சிறிய ரக விமானத்தின் கேப்டன் விமானத்தை இயக்குகையில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Captain of a Boston bound flight with 147 passengers died in the midair. Co-pilot swift plunge into action and landed the plane safely.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X