For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூட்கேசுக்குள் மறைத்து சிறுவனை கடத்திய கில்லாடி பெண்; காட்டிக்கொடுத்த ஸ்கேன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஸ்பெயின்: ஸ்பெயினுக்குச் சொந்தமான பிரதேசமான, சியுட்டாவிற்கு எட்டு வயதுச் சிறுவன் ஒருவனை ஒரு சூட்கேசுக்குள் அடைத்து வைத்து கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கேன் மூலம் இதனை கண்டுபிடித்த அதிகாரிகள் சிறுவனைக் கடத்திய இளம்பெண்ணை கைது செய்தனர்.

மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த அந்த 8வயது சிறுவன், ஸ்பெயின் நாட்டின் சியூட்டாவிற்க சூட்கேசில் கடத்தப்பட்டு உள்ளான் என்று ஸ்பெயின் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

19-வயது இளம்பெண், ஸ்பானிஷ் விமான நிலையத்திற்கு சூட்கேசுடன் வந்து உள்ளார். அப்போது அந்த பெண்மணியில் சூட்கேஸ் ஸ்கேனிங் கருவியில் வைக்கப்பட்டது. அந்த சூட்கேஸை ஸ்கேன் செய்த அதிகாரி அதிர்ச்சியடைந்தார். காரணம் அந்த பெட்டிக்குள் கால்கள் மடக்கப்பட்ட நிலையில் ஒரு உருவம் தெரிந்தது. அந்தப் பெட்டியை திறந்து பார்த்தனர், அதில் 8 வயது சிறுவன் உயிரோடு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த சிறுவனை மீட்டு அதிகாரிகள், குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

8 வயது சிறுவன் கடத்தல்

8 வயது சிறுவன் கடத்தல்

8 வயது சிறுவன் அபு என்றும், இவர் ஐவரி கோஸ்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்து உள்ளது. சூட்கேசுக்குள் சிறுவனை மறைத்து கொண்டு வந்த 19 வயது பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், பெண்ணை நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தினர்.

தந்தையும் கைது

தந்தையும் கைது

சிறுவனின் தந்தையையும் அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். அவரும் சட்டவிரோதமாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைய முயன்றபோது சிக்கிக் கொண்டார். அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. சிறுவனின் தந்தையும் ஐவரி கோஸ்டை சேர்ந்தவர், ஆனால் ஸ்பெயினின் கனாரே தீவில் வாழ்ந்து வருகிறார்.

ஊடகங்களில் பரபரப்பு

ஊடகங்களில் பரபரப்பு

இதனிடையே சிறுவன் சூட்கேஸ் மூலம் மறைத்து கடத்தப்பட்டது, ஸ்கேனிங்கில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் உலகம் முழுவதும் ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் வெளியாகி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

சட்ட விரோத ஊடுருவல்

சட்ட விரோத ஊடுருவல்

தன்னாட்சி நகரமான செயுத்தாவின் வழியாக ஸ்பெயின் நாட்டிற்கு ஊடுருவ இதுபோன்று வருடத்திற்கு ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோத செயல்கள் ஈடுபட்டு சிக்கிக் கொள்கின்றனர். ஆப்பிரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருபவர்களால் ஸ்பெயினில் பெரும் பிரச்சனை நிலவுகிறது.

ஆயிரக்கணக்கானோர் ஊடுருவல்

ஆயிரக்கணக்கானோர் ஊடுருவல்

கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 16 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சி செய்தனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 5 ஆயிரம் பேர் வெற்றிகரமாக ஸ்பெயின் நாட்டிற்குள் ஊடுருவிவிட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் 3 ஆயிரம் பேர் ஊடுருவி உள்ளனர்.

English summary
An eight-year-old boy has been found hidden inside a suitcase by customs officials at the border between Morocco and Spain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X