For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒன்றல்ல இரண்டல்ல.. 4 தடுப்பூசி.. எல்லாமே இறுதி கட்டம்.. இதுதான் பிரேசில் டெக்னிக்.. சோதனை விறுவிறு

Google Oneindia Tamil News

பிரேசிலியா: பிரேசில் நாட்டு சுகாதார அமைச்சகம் செவ்வாய் அன்று ஜான்சன் அண்ட் ஜான்சனின் புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான பரிசோதனை தடுப்பூசிக்கு இறுதி கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரேசில் பரிசோதனையை தொடங்கும் நான்காவது தடுப்பூசி ஆகும்.

உலகில் லட்சக்கணக்கான மக்களை பலி கொண்டு வரும் கொரோனாவிற்கு முடிவு கட்ட உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர்.

தற்போதைய நிலையில் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி, சீனாவின் சினோவாக் பயோடெக் தடுப்பூசி, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, அமெரிக்காவின் மார்டனா தடுப்பூசி ஆகியவை இறுதி கட்ட சோதனையில் முன்னணியில் இருக்கின்றன. இந்த வரிசையில் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியும் இணைந்துள்ளது.

இந்தியாவில் இந்த வாரம் துவங்குகிறது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3வது கட்ட டிரையல்.. யாருக்கு முதல் டோஸ்? இந்தியாவில் இந்த வாரம் துவங்குகிறது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3வது கட்ட டிரையல்.. யாருக்கு முதல் டோஸ்?

நான்கு தடுப்பூசி

நான்கு தடுப்பூசி

அமெரிக்க மருந்து நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. முதல் இரண்டு ஸ்டேஜ் சோதனைகளை முடித்துள்ள அந்நிறுவனம் இறுதிகட்ட பரிசோதனையை தொடங்கி உள்ளது. ஏனெனில் மூன்றாம் கட்டமாக நடத்தப்படும் இறுதிகட்ட பரிசோதனையை மனிதர்களுக்கு பெரிய அளவில் நடத்தும் போது தான் பக்கவிளைவு இருக்கிறதா அல்லது சாதகமான நிலை உள்ளதா என்பதை கண்டுபிடிக்க முடியும். இதனால் தான் அனைத்து தடுப்பூசிகளும் இறுதிகட்ட முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளன.

பிரேசில் ஒப்புதல்

பிரேசில் ஒப்புதல்

உலகிலேயே அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அனைத்து பரிசோதனை தடுப்பூசிக்கு அனுமதி அளித்து வருகிறது. மருந்து வெற்றி என்றால் தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இதை அனுமதிக்கிறது. இதன்படி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பிரேசிலில் ஏழு மாநிலங்களில் 7,000 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசியை பரிசோதிக்கிறது. இந்த நிறுவனம் பிரேசில் உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 60,000 பேருக்கு தனது சோதனை தடுப்பூசியை பரிசோதித்து வருகிறது.

பிரேசில் கொரோனா

பிரேசில் கொரோனா

அமெரிக்காவிற்குப் பிறகு, தென் அமெரிக்க நாடான பிரேசில் தான் இரண்டாவது மிக அதிகமான நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளைக் கொண்டுள்ள நாடு ஆகும். 3.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 110,000 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

ஒப்புதல் அளித்த பிரேசில்

ஒப்புதல் அளித்த பிரேசில்

பிரேசில் நாடு தற்போதைய நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா இணைந்து தயாரித்த தடுப்பூசி, சீன மருந்து நிறுவனமான சினோவாக் பயோடெக் மற்றும் அமெரிக்க நிறுவனமான ஃபைசர் ஆகியவற்றுடன் இணைந்து ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி ஆகிய தடுப்பூசிகளுக்கும் மூன்று கட்ட சோதனைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Recommended Video

    Covaxin முதல் சோதனை வெற்றி.. இரண்டாம் கட்ட சோதனைக்கு தயார் | OneindiaTamil
    பிரேசில் ஆர்வம்

    பிரேசில் ஆர்வம்

    ரஷ்யாவின் "ஸ்பூட்னிக் வி" தடுப்பூசியை பரிசோதித்து தயாரிப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தில் பிரேசில் மாநிலமான பரணா கடந்த வாரம் கையெழுத்திட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்ற உலகின் முதல் நாடாக ரஷ்யா உள்ளது. ரஷ்யாவும் அடுத்த வாரம் 3ம் கட்ட சோதனையை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

    English summary
    Brazil has become a key testing ground in the search for a vaccine against COVID-19. Brazil has approved Johnson & Johnson's experimental vaccine against the new coronavirus for the final stage of clinical trials. till now The South American nation approved the fourth vaccine to receive widespread testing in the hard-hit country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X