For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

300 பெண்களையா.. நானா.. சேச்சே.. அது ஆவிகளோட வேலை.. "அப்பாவி"கள் மீது பழியை போடும் பிரேசில் மதபோதகர்!

Google Oneindia Tamil News

ரியோ டி ஜெனிரோ: 300 பெண்களை பலாத்காரம் செய்தது நானில்லை. என்னுள் புகுந்த 30 டாக்டர்களின் ஆவிகளின் வேலை என பிரேசில் நாட்டு மதபோதகர் ஒருவர் தெரிவித்தார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் ஜோ டெய்சீரா ஃபாரியா (76). இவர் நோய்களை குணப்படுத்துவதாக கூறிவந்தார். குறிப்பாக மனநல நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பதாக கூறிவந்தார்.

இதை நம்பி ஏராளமான ஆண்கள், பெண்கள் ஆகியோர் சிகிச்சைக்கு வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் டச்சு புகைப்பட கலைஞர் ஒருவர் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

பலாத்காரம்

பலாத்காரம்

அதில் அவர் கூறுகையில் அவரிடம் வரும் மனநல நோயாளிகளுக்கு உணர்ச்சிகளை தூண்டி விட்டு பாலியல் பலாத்காரம் செய்வதாக குற்றம்சாட்டினார். அதுபோல் தன்னையும் அவர் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

மறுப்பு

மறுப்பு

இதையடுத்து அவர் பலாத்காரம் செய்ததார 350-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்ததை அடுத்து போலீஸாரே அதிர்ந்தனர். இதையடுத்து அவரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

குற்றவாளி

குற்றவாளி

இதையடுத்து அவர் பலாத்காரம் செய்ததாக 350-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்ததை அடுத்து போலீஸாரே அதிர்ந்தனர். இதையடுத்து அவரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

சிகிச்சை

சிகிச்சை

இந்நிலையில் அவர் திடீரென போலீஸில் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் 30-க்கும் மேற்பட்ட டாக்டர்களின் ஆவிகள் என் மீது இருக்கிறது. இதனால்தான் என்னால் நோய்க்கு சிகிச்சை அளிக்க முடிந்தது.

சிறை தண்டனை

சிறை தண்டனை

மேலும் பெண்களை பலாத்காரம் செய்தது நான் இல்லை. அந்த டாக்டர் ஆவிகளின் கைங்கர்யம் என ஃபாரியா வாக்குமூலம் அளித்தார். ஃபாரியா ஒரு மருத்துவரே இல்லை. அவர் மருத்துவ லைசன்ஸ் ஏதும் இன்றி அறுவை சிகிச்சை செய்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A Brazilian faith healer accused of sexually abusing more than 300 women has handed himself in to police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X