For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனாவை சமாளிக்க முடியலடா சாமி ... இந்தியாவிடம் 20 மில்லியன் தடுப்பூசிகளை வாங்கும் பிரேசில்!

Google Oneindia Tamil News

பிரேசில்லா: இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து பிரேசில் 20 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வாங்க உள்ளது.

முதல் 8 மில்லியன் டோஸ் மார்ச் மாதத்தில் பிரேசிலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா வைரஸ் பாதிப்புகளை சமாளிப்பதற்கு புதிய விதிகளை வெளியிட்டதாக பிரேசில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 60,00-க்கு மேற்பட்ட பாதிப்பும், 1,541 புதிய உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே பள்ளியில் படிக்கும் 225 மாணவர்களுக்கு கொரோனா... அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனைஒரே பள்ளியில் படிக்கும் 225 மாணவர்களுக்கு கொரோனா... அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை

அமெரிக்காவில் ஆதிக்கம்

அமெரிக்காவில் ஆதிக்கம்

உலகம் முழுவதும் கொரோனா ஓயாத ஆட்டம் போட்டு வருகிறது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா பாதிப்பில் முதல் இடத்தில் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. அடுத்த இடத்தில் இருப்பது நமது இந்தியா. இந்தியாவில் ஓரளவு கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் தலைதூக்குகிறது

இந்தியாவில் மீண்டும் தலைதூக்குகிறது

இந்தியாவின் கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாதிப்புகள் தொடர்ந்து அதிகமாக உள்ளன. இந்த 5 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. புதிய உருமாற்ற வைரஸ்கள் பரவலாம் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவிடம் தடுப்பூசி வாங்கும் பிரேசில்

இந்தியாவிடம் தடுப்பூசி வாங்கும் பிரேசில்

உலகளவில் அதிக பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருப்பது பிரேசில் நாடு ஆகும். அங்கு தினமும் 50,000-க்கும் மேல் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. தினசரி 1500-க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்ட பிரேசில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து பிரேசில் 20 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வாங்க உள்ளது.

மார்ச்சில் 20 மில்லியன் டோஸ்

மார்ச்சில் 20 மில்லியன் டோஸ்

இது தொடர்பாக பிரேசில் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் பாரத் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் 20 மில்லியன் டோஸ் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையே விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தில் பிரேசில் சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் 1.6 பில்லியன் ரைஸ் (0 290,000) மதிப்புடையது என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதிப்புகளை சமாளித்தல்

பாதிப்புகளை சமாளித்தல்

முதல் 8 மில்லியன் டோஸ் மார்ச் மாதத்தில் பிரேசிலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தடுப்பூசிகள் வாங்குவதை விரைவுபடுத்துவதற்கும், கொரோனா வைரஸ் பாதிப்புகளை சமாளிப்பதற்கும் புதிய விதிகளை வெளியிட்டதாக பிரேசில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 60,000-க்கு மேற்பட்ட பாதிப்பும், 1,541 புதிய உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Brazil is to buy 20 million corona vaccines from India's Bharat Biotech
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X