• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்க்கதான் இவரு டான்.. ஆனா மனசு குழந்தைங்க.. ஒரு ஊசி போட்டதுக்கே இப்டி மயங்கிட்டாரே!

|

பிரேசிலியா: பிரேசிலில் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது, பயில்வான் போன்ற தோற்றத்தில் இருந்த ஒருவர் பயத்தில் மயங்கி விழுந்து, அங்கிருந்த மருத்துவ ஊழியர்களைப் பதறச் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில் பெரிய காமெடி என்னவென்றால் இந்த வீடியோவை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டது அவரது அன்பு மனைவி தான்.

  பார்க்கதான் இவரு டான்.. ஆனா மனசு குழந்தைங்க.. ஒரு ஊசி போட்டதுக்கே இப்டி மயங்கிட்டாரே!

  பாம்பென்றால் மட்டுமல்ல.. ஊசியென்றாலும் பதறும் கூட்டம் இன்னமும் உள்ளது. 'நான் அப்டியாக்கும், இப்டியாக்கும்... மதம் பிடிச்ச யானையையே ஒரு கைல மடக்கிடுவேன்' என ஜம்பம் பேசுபவர்கள்கூட, நர்ஸ் ஊசியைத் தூக்கிக் கொண்டு வந்தால், பாடி ஸ்டாராங்கு, பேஸ்மெண்ட் வீக்கு என நடுங்கத் தொடங்கி விடுவார்கள்.

  கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்! கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!

  அப்படித்தான் நகைச்சுவையான சம்பவம் ஒன்று பிரேசிலின் சா பாலோ நகரில் நடந்துள்ளது.

  பாவம்ங்க மகுலா

  பாவம்ங்க மகுலா

  பார்ப்பதற்கு நன்கு ஆஜானுபாகுவாக, பாடி பில்டர் போல் இருக்கிறார் மகுலா எனும் அந்த 50 வயது மதிக்கத்தக்க நபர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன் மனைவியுடன் அவர் ஆஸ்ட்ராஜெனகா கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக அருகில் இருந்த மையம் ஒன்றிற்கு சென்றுள்ளார். வீரம்ங்கறது பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது தானேங்க.. ஆனா பாவம் மகுலாவால் நீண்ட நேரம் அப்படி நடிக்க முடியவில்லை.

  கூல்.. கூல்..

  கூல்.. கூல்..

  சமத்தாக பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் வரிசையில் நின்றிருந்த மகுலாவுக்கு, நர்சை நெருங்க நெருங்க பயத்தில் கை, கால்கள் எல்லாம் டைப்படிக்க ஆரம்பித்து விட்டது. ஒரு கட்டத்தில் வெளிப்படையாக கை, கால்கள் எல்லாம் நடுநடுங்க நர்ஸ் முன்னே போய் நின்றுள்ளார். அவரது பதட்டத்தைப் புரிந்து கொண்ட அங்கிருந்த மருத்துவர்கள், ‘கூல்.. கூல்..' என அவரை கூல் செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் நர்ஸ் கையில் ஊசியை எடுத்ததும், மகுலாவால் நிற்கக்கூட முடியவில்லை.

  பயந்து வருது மேடம்

  பயந்து வருது மேடம்

  நர்ஸின் கையைப் பிடித்துக் கொண்டு, தரையில் நிற்க முடியாமல் நடுங்குகிறார். எங்கே மகுலா ஆடும் ஆட்டத்தில், நர்ஸ் ஊசியை அவரது கழுத்தில் குத்தி விடுவாரோ என வீடியோவைப் பார்க்கும் நமக்கே பயம் வந்து விடுகிறது. ஆட்டமென்றால் ஆட்டம் அப்படி ஒரு ஆட்டம். ஒரு வழியாக வலது கையில் ஊசியைக் குத்த தயாராகிறார் நர்ஸ். அதுவரை லேசான டெசிபலில் கத்திக் கொண்டிருந்த மகுலா, திடீரென வீறுகொண்டு கத்துகிறார்.

  இன்னும் கதை இருக்கு..

  இன்னும் கதை இருக்கு..


  அப்பாடா ஒரு வழியாக ஊசியைப் போட்டு விட்டார்கள் போல.. என நாம் நிம்மதி மூச்சை இழுத்து விட்டால்.. அதுதான் இல்லை. ‘ஏய் இன்னும் குத்தவேயில்ல.. அதுக்குள்ள இப்டி கத்துற மேன்..' என நர்ஸ் மகுலாவைப் பார்த்து ஒரு லுக் விடுகிறார். அப்போது தான் தெரிகிறது இன்னமும் அவருக்கு ஊசிப் போடப்படவில்லை என.

  வாஸ்து சரியில்ல..

  வாஸ்து சரியில்ல..

  வலது கைல வாஸ்து சரியில்ல.. என இடது கையைக் காட்டுகிறார் மகுலா. விட்டால் இவர் இப்படி ஆடி ஆடியே பொழுதைப் போக்கி விடுவார் என நறுக்கென அதில் ஊசியைக் குத்தி விடுகிறார் நர்ஸ். அவ்வளவுதான், அடக்கி வைத்திருந்த பயம் எல்லாத்தையும் மொத்தமாக திரட்டி, ஆ என அலறிக் கொண்டே மயங்கி கீழே விழுந்து விடுகிறார் மகுலா. இதைப் பார்த்து பதறிப் போய் விடுகின்றனர் அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள்.

   மரண பயம்

  மரண பயம்

  பப்பரப்பே என கீழே விழுந்து கிடக்கும் மகுலாவிற்கு உடனடியாக முதலுதவி செய்கின்றனர். கஷ்டப்பட்டு அவரை எழ வைத்து அருகில் இருக்கும் நாற்காலியில் அமர வைத்து, குடிக்கத் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்துகின்றனர். அவர் கொஞ்சம் தேவலாம் என்று தெரிந்த பிறகு தான், அங்கிருந்தவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிறார்கள். ஆனாலும், ‘கண்ணுல மரணபயத்தைக் காட்டிட்டாங்க பரமா..' என்ற ரேஞ்சுக்குத்தான் அமர்ந்திருக்கிறார்.

  அன்பு மனைவி தான்

  அன்பு மனைவி தான்

  சினிமா மாதிரி, மகுலாவின் இந்த ஊசி குத்தும் படலத்தை அழகாக, ஒரு காட்சிகூட மிஸ் ஆகிவிடால், படமாக்கியது யார் எனத் தெரிந்தால், இந்தச் செய்தியைப் படிக்கும் உங்களுக்கே மயக்கம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்த ரணகளத்திலும் குதூகலமாக இப்படி அணுஅணுவாக ரசித்து அதனைப் பதிவு செய்தது சாச்சாத் அவரது அன்பு மனைவி தான்.

   அட போங்க பாஸ்

  அட போங்க பாஸ்

  என்னாது மகுலா பட்ட இத்தனைக் கஷ்டங்களையும் படமாக்கியது அவரது மனைவி தானா? அவர் ஏன் அப்படிச் செய்தார் எனக் கேட்டால், கூலாக பதில் கூறுகிறார் அவர். அதாகப்பட்டது மக்களே.. மகுலா இப்படி ஊசியைப் பார்த்ததும் மயக்கம் போட்டு விழுவது இது முதல்முறையில்லையாம். இதற்கு முன்னர் பலமுறை இப்படி நடந்துள்ளதாம்.

  இதுதாங்க திட்டம்

  இதுதாங்க திட்டம்

  எனவே இதை எப்படியாவது ஆவணப் படுத்திவிட வேண்டும் என திட்டமிட்டிருக்கிறார் அவரது மனைவி. அதனால் தான் ஊசி போட அவர் வரிசையில் நிற்கும் போதே, கேமராவை ஆன் செய்து விட்டார். ஊசி போட்டதும் மயக்கம் போட்டு விழும் மகுலா சிறிது நேரத்தில் சகஜமாகி விடுவார் என்பதால், அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அனைத்தையும் படமாக்கி இருக்கிறார்.

  குழந்த மனசு சார்

  குழந்த மனசு சார்

  இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு புறம் பார்க்க பார்க்க சிரிப்பாக இருந்தாலும், மறுபுறம் மகுலாவின் நிலையைப் பார்த்து பரிதாபமாகவும் இருக்கிறது. இவ்ளோ பெரிய மனுசனுக்குள்ள இப்படி ஒரு குழந்தைமனசா என நெட்டிசன்கள் உச் கொட்டி வருகின்றனர். சரியான பாடிசோடா என ஒரு சிலர் மகுலாவைக் கலாய்த்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  ஊசி புண்ணியத்தில்..

  ஊசி புண்ணியத்தில்..

  இன்னும் ஒரு சிலரோ, ஒரு படி மேலே போய், மகுலாவாக தங்களை மனதில் நினைத்துக் கொண்டு, ‘அடி கிராதகி.. ஒரு மனுசன் பயத்துல நடுங்கிட்டு இருக்கும் போது.. இப்டி வீடியோ எடுத்து அசிங்கப்படுத்துறியே..' என உரிமையாக மகுலாவின் மனைவியை மனசாரத் திட்டி தீர்த்துள்ளனர். எது எப்படியோ ஒரெ ஒரு ஊசியால் இப்போ உலகளவில் பிரபலமாகி விட்டார் மகுலா.

  English summary
  A video of a man in Brazil fainting while taking covid vaccination is viral now in social media.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X