For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்.எஸ்.ஜி. விவகாரம்: பிரேசில், நியூசிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

தாஷ்கண்ட்: அணுசக்தி மூலப் பொருள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பான என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராவதற்கு பிரேசில், நியூசிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

48 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராவதற்கு தீவிரமாக முயற்சித்து வருகிறது. அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் பதவி காலத்துக்குள் உறுப்பினராகிவிட வேண்டும் என்பது பிரதமர் மோடியின் எண்ணம்.

Brazil, others oppose india entry to NSG

அந்நாட்டின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு மேற்கொள்வார்கள் எனத் தெரியாது. ஆகையால்தான் இந்தியா படுதீவிரமாக முயற்சித்து வருகிறது.

இந்த குழுவில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்
சீனா மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இந்தியாவை உறுப்பினராக்கினால் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என்று அந்நாடு வலியுறுத்தி வருகிறது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் என்எஸ்ஜியில் சேரக் கூடாது என்றும் சீனா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவோ, அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாமலேயே உறுப்பினராக உள்ள பிரான்ஸ் நாட்டை மேற்கோள் காட்டி தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறுகிறது. இந்த நிலையில், தென்கொரிய தலைநகர் சியோலில் என்.எஸ்.ஜி உறுப்பு நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்தியாவை என்.எஸ்.ஜியில் இணைத்துக்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது இந்தியாவை என்.எஸ்.ஜியில் சேர்த்துக்கொள்ள மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அதேவேளையில், இந்தியாவை இணைப்பதற்கு சீனா, பாகிஸ்தான் மட்டுமல்லாது மேலும் 5 நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

பிரேசில் ,ஆஸ்திரியா, அயர்லாந்து, துருக்கி, நியூசிலாந்து ஆகிய நாடுகள் அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதை மேற்கோள் காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே வேளையில், பாகிஸ்தானை என்.எஸ்.ஜியில் உறுப்பு நாடாக இணைத்துக்கொள்வது பற்றி விவாதிக்கப்படவில்லை. முன்னதாக அணுசக்தி மூலப் பொருள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பான என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராவதற்கு சீனா அதிபர் ஜீ ஜின்பிங்கை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆதரவு கோரியிருந்தார்.

English summary
Brazil, Austria, New Zealand, Ireland and Turkey opposed India’s induction into the 48-member group of NSG
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X