For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று.. மருத்துவமனையில் அனுமதி

Google Oneindia Tamil News

பிரேசிலியா: பிரேசில் அதிபர் ஜாயிர் போல்சனாரோவுக்கு சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. அத்துடன் உலகிலேயே பிரேசில் நாட்டில் தான் கொரோனா பலி அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 1,628,283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 65,631 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 656 பேர் இறந்துள்ளனர்.

brazil president jair bolsonaro tested positive for coronavirus

இந்நிலையில் அந்நாட்டு அதிபர் ஜாயிர் போல்சனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். சோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதியானது.. இதையடுத்து அலுவலக பணிகளில் இருந்து விடுத்து கொண்டு தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அதிபர் ஜாயிர் போல்சனாரோ தனக்கு கொரோனா இருப்பதை தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.

தமிழகத்தில் இன்னொரு முறை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை.. முதல்வர் பழனிசாமிதமிழகத்தில் இன்னொரு முறை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை.. முதல்வர் பழனிசாமி

Recommended Video

    சீனாவால் உலகத்துக்கே பெரும் சேதம் - கொந்தளித்த Donald Trump

    போல்சனாரோ தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிபரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    English summary
    Coronavirus: Brazil's President Bolsonaro tests positive and admitted in hospital
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X