For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா அதிகம்தான் என்ன செய்ய சொல்றீங்க.. அற்புதம் நடத்த எனக்கு தெரியாது.. பிரேசில் அதிபர் அலட்சியம்

Google Oneindia Tamil News

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு அதற்கு என்ன இப்ப, நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். எனக்கு அற்புதம் எல்லாம் செய்யத் தெரியாது என அதிபர் ஜெயிர் போல்சோனாரோ தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    உலகத்தை உலுக்கிய கொள்ளை நோய்கள்... இனியாவது மாறுவோமா?

    பிரேசில் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக மாறும் நிலையில் உள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 79, 685 ஆக உள்ளது. அதாவது புதிதாக 324 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 5,513 ஆக உள்ளது. இங்கு நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 34,132 ஆக உள்ளது.

    தற்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 40,040 ஆக உள்ளது. இவர்களில் 8 ஆயிரம் பேரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஒரு மாத இடைவெளியில் 5 ஆயிரத்துக்கும் மேலானோர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொரோனா பிரச்சினைக்கு பிறகு, கிடுகிடுவென உயரும் மோடி செல்வாக்கு.. அடித்து சொல்லும் கருத்து கணிப்புகள்கொரோனா பிரச்சினைக்கு பிறகு, கிடுகிடுவென உயரும் மோடி செல்வாக்கு.. அடித்து சொல்லும் கருத்து கணிப்புகள்

    சோதனை

    சோதனை

    இங்கு போதுமான மருத்துவ வசதிகள் இல்லை என்றும் கொரோனா சோதனைக்கு போதிய கிட்டுகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நோயின் தீவிரம் குறித்து சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்தாலும் அதை அதிபர் கேட்பதில்லை என கூறப்படுகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சுகாதாரத் துறை

    சுகாதாரத் துறை

    ஆனால் தொற்றுநோயின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடும் அதிபர், சுகாதாரத் துறையின் எச்சரிக்கையை ஏற்க மறுத்து மே முதல் ஜூன் மாதம் வரை மட்டுமே இந்த பாதிப்பு அதிகரிக்கும் என தெரிவிக்கிறார். இந்த நிலையில் பிரேசிலில் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் அதிபரிடம் கேள்வி எழுப்பினர்.

    பொறுப்புகள்

    பொறுப்புகள்

    இதுகுறித்து பிரேசில் அதிபர் கூறுகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் விவரங்கள் மாகாண ஆளுநர்கள் மற்றும் மேயர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பாதிப்புகள் குறித்து அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். பொறுப்பை என் தோளில் சுமந்து கொள்ள முடியாது என்றார். உடனே நிருபர்கள் இது போன்ற நெருக்கடியான சூழலில் அதிபராகிய உங்களது பொறுப்புகள்தான் என்ன என கேள்வி எழுப்பினார்கள்.

    அற்புதம் நடத்த தெரியாது

    அற்புதம் நடத்த தெரியாது

    அதற்கு அவர் இது முட்டாள்தனமான கேள்வி. நான் இதற்கு பதிலளிக்க முடியாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது. அதற்கு இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்காது என்றார். மீண்டும் ஒரு முறை கொரோனா குறித்த கேள்வி எழுப்பிய போது அவர் கூறுகையில் அதனால் என்ன, நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள், என்னால் அற்புதங்களை எல்லாம் நிகழ்த்த முடியாது என்று போல்சோனாரோ தெரிவித்தார்.

    English summary
    Brazil President says that he could not do any miracles while asking about coronavirus severeity in his country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X