For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவைவிட பிரேசிலில் ஒருநாள் கொரோனா மரணங்கள் அதிகம்!

Google Oneindia Tamil News

ஜெனிவா: அமெரிக்காவை விட பிரேசிலில் ஒருநாள் கொரோனா மரணங்கள் மிக அதிகமாகி உள்ளன.

உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71,89,794 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,08,239 ஆகவும் உள்ளது.

Brazil reports 813 new coronavirus deaths

கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 35,30,751 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 18,968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,26,417 ஆக அதிகரித்தது. அமெரிக்காவில் நேற்று ஒருநாளில் 585 பேர் மாண்டு போயினர்.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 7,10,887 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் அமெரிக்காவைவிட நேற்று பிரேசிலில்தான் மரணங்கள் அதிகம். பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 813 பேர் உயிரிழந்தனர். மொத்தம் மொத்தம் பிரேசிலில் 37,312 பேர் உயிரிழந்துள்ளனர்

அக்டோபர், நவம்பரில் கொரோனா மேலும் அதிகரிக்கும்.. 2 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு- தமிழக அரசு தகவல் அக்டோபர், நவம்பரில் கொரோனா மேலும் அதிகரிக்கும்.. 2 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு- தமிழக அரசு தகவல்

கொரோனா பாதிப்பில் ரஷ்யா மீண்டும் 3-வது இடத்துக்கு வந்துள்ளது. ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 8,985 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8,442 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தியாவுக்கு அடுத்ததாக பாகிஸ்தானில் 4,728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

English summary
Brazil reported 813 new Coronavirus deaths on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X