For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணுவ சர்வாதிகார ஆட்சியில் நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தப்பட்டேன்: பிரேசில் ஜனாதிபதி தில்மா

By Mathi
Google Oneindia Tamil News

பியூனஸ் அயர்ஸ்: ராணுவ சர்வாதிகார ஆட்சியில் தாம் நிர்வாணமாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக பிரேசில் ஜனாதிபதி தில்மா ரூசெப் உருக்கமான தகவல் வெளியிட்டு உள்ளார்.

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் 1964-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை ராணுவ சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றது. அக் காலகட்டத்தில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்த மக்களை ராணுவம் கைது செய்து கொடுமைப்படுத்திக் கொன்றது.

Brazil's torture report brings President Dilma Rousseff to tears

பலர் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமை படுத்தப்பட்டார்கள். பின்னர் மக்கள் ஆதரவுடன் ராணுவ ஆட்சி தூக்கி வீசப்பட்டது. ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அதன் பின்னர் இடதுசாரிகள் தேர்தலின் மூலம் ஆட்சியதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கடந்த தேர்தலிலும் இடதுசாரி கொள்கை கொண்ட தில்மா ரூசெப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது பிரேசில் ஜனாதிபதியாக இருக்கும் தில்மா ரூசெப் சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்தார்.

இதனால் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராணுவ சர்வாதிகார ஆட்சியில் நடைபெற்ற கொடுமைகளை அறிய தேசிய உண்மை கண்டறியும் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இக் குழு பிரேசில் முழுவதும் சென்று விசாரணை நடத்தி அந்நாட்டு அரசிடம் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது.

இது பற்றி பிரேசில் ஜனாதிபதி தில்மா ரூசெப் அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது:

பிரேசிலில் கடந்த 1964-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை நடைபெற்ற சர்வாதிகார ஆட்சி வீழ்ந்து நாம் இப்போது சுதந்திரமாக உள்ளோம்.

சர்வாதிகார ஆட்சியில் மக்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். ராணுவத்தால் பலர் சித்ரவதை செய்யப்பட்டனர். குற்றம் செய்தவர்கள் நீதி முன்பு நிறுத்தப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். கொடுங்கோல் ஆட்சியில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன்.

1970ஆம் ஆண்டு எனக்கு 22 வயது. அந்த ஆட்சியை எதிர்த்தேன் என்ற ஒரே காரணத்துக்காக நான் கைது செய்யப்பட்டேன். சிறையில் வைத்து என்னை நிர்வாணமாக்கி அடித்து கொடுமைப்படுத்தினார்கள். கரண்ட் ஷாக் கொடுத்தனர். பாலியல் ரீதியா துன்புறுத்தினர்.

என்னையும், எனது 2 குழந்தைகளையும் சிறைக்கு இழுத்துச் சென்றார்கள். அங்கும் என்னை குழந்தைகள் முன்பு மிருகத்தனமாக அடித்தார்கள். இதில் நான் பலத்த காயம் அடைந்தேன். காயங்களில் இருந்து வழிந்த ரத்தம் உடல் முழுவதும் வழிந்து காய்ந்து போய்விட்டது.

இதைபார்த்து என்னுடன் இருந்த எனது 4 வயது மற்றும் 5 வயது வயது குழந்தைகள் என்னை பார்த்து "அம்மா உன் உடல் ஏன் இப்படி நிறம் மாறி இருக்கிறது" என்று அப்பாவியாக கேட்டது இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை.

இதேபோல் எனது கர்ப்பிணி சகோதரியும், அவரது கணவரும் சித்ரவதை செய்யப்பட்டனர். அவரது கட்சி உறுப்பினர், அவரது கண்முன்னால் அடித்து கொல்லப்பட்டார். இந்த சித்ரவதைகளுக்கு யார் எல்லாம் காரணம் என்று எனக்கு நன்றாக தெரியும்.

அவரும், அவரது குடும்பத்தினரும் இப்போது சுதந்திரமாக சுற்றுகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தில்மா ரூசெப் கூறினார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரேசில் மனித உரிமை அமைப்பின் இயக்குனர் மரியா லாரா கனியு, விசாரணைக்குழு அறிக்கையில் மனித உரிமைகளை மீறி சித்ரவதை செய்ததாக 377 பேர் குற்றவாளிகள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஆதாரம் உள்ளது. எனவே குற்றவாளிகள் தப்ப முடியாது என்றார்.

English summary
Brazilian President Dilma Rousseff gave a speech at a ceremony marking the release of a report by Brazil's National Truth Commission that examined the human rights abuses that occurred during Brazil's 1964-1985 military rule. During Ms Rousseff's speech, she briefly broke down in tears and received a standing ovation from the crowd.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X