• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

18 ஆண்டுகளில் 40 லட்சம் மரங்கள்.. வறண்ட நிலத்தை பசுமை வனமாக மாற்றிய பிரேசில் தம்பதி

|

ரியோடி ஜெனீரோ: வறண்டு பாலைவனமாக கிடந்த கரட்டு காட்டு நிலத்தில் 18 ஆண்டுகளில் 40 லட்சம் மரங்களை நட்டு அடர்ந்த வனமாக மாற்றியுள்ள பிரேசில் தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மனிதர்களால் வனங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 1990 முதல் 2016ம் ஆண்டுக்குள் 5லட்சத்து 20 ஆயிரம் சதுர மைல் வனகாடுகள் அழிக்கப்பட்டு இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த காடுகள் எல்லாம் விவசாய நிலங்களாகவும், வீட்டுமனைகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. இது மொத்த தென் ஆப்பிரிக்காவின் பரப்பளவுக்கு சமம் ஆகும்.

இது வெறும் காடுகள் அழிப்பு பற்றியது மட்டுமல்ல.. 15 சதவீத பசுமை வாயுக்கள் வெளியேறுவது குறைந்துள்ளது. எண்ணற்ற உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் தங்கள் வாழ்விடங்களை இழக்க காடு அழிப்பு காரணமாகி உள்ளது. இப்படி காடுகளை அழிப்பதன் மூலம் சொத்துக்களை சேர்க்க ஆசைப்படும் மனிதர்கள் தங்கது வாழும் சூழலை தாங்களே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு வருகிறார்கள்

பாதுகாக்கும் மனிதர்கள்

பாதுகாக்கும் மனிதர்கள்

இந்த சூழலில் மரங்களையும், வனவிலங்குகளையும் காடுகளையும் நேசிக்கும் மனிர்கள் உலகின் எங்கோ ஒரு மூளையில் வசிக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களை போல் சொத்துக்ளையும் சுகங்களையும் தேடி அலைவதில்லை. மாறாக மரங்களையும் காடுகளையும், வனவிலங்குளையும் வாழ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வாழும் பகுதி அழகாகவும் இயற்கை அன்னையால் ஆசிர்வதிக்கப்பட்ட சொர்க்கமாகவும் திகழ்கின்றன.

பிரேசில் தம்பதி

பிரேசில் தம்பதி

இப்போது நாம் பார்க்க போவதும் அப்படிப்பட்ட தம்பதியை பற்றித்தான். ஆம் பிரேசிலின் பாலைவனமாக கிடந்த கட்டாந்தரை நிலத்தில் 18 வருடங்களில் 40 லட்சம் மரங்களை நட்டு அற்புதமான வனமாக ஒரு தம்பதி மாற்றியுள்ளார்கள்.

புகைப்பட கலைஞர் செபஸ்டோ

புகைப்பட கலைஞர் செபஸ்டோ

பிரேசிலைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் செபஸ்டோ சல்காடோஸ். இவர் தனது வாழ்க்கையில் பல்வேறு துயரமான நிலைகளை பார்த்து இருக்கிறார். ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை குறித்து செய்தி சேகரித்துவிட்டு ஊர் திரும்பிய அவர், தனது காடுகளில் மரங்கள் எல்லாம் மொத்தமாக அழிக்கப்பட்டு மோசமாக இருப்பதை கண்டு வேதனை அடைந்தார்.

18 ஆண்டுகளில் சாதனை

18 ஆண்டுகளில் சாதனை

இதையடுத்து மரங்களை வளர்க்க முடிவு செய்த சல்கோடோ 1998ம் ஆண்டு இன்ஸ்டியூட்டோ டெரா (Instituto Terra) என்ற தொண்டு நிறுவனம் ஒன்றை துவக்கினார் தனது மனைவி லெல்லியாவுடன் இணைந்து சில தன்னார்வலர்களை சேர்த்துக்கொண்டு மரங்களை நட ஆரம்டபித்தார். ரியோ டோஸ் பள்ளத்தாக்கில் உள்ள அட்லாண்டிக் காடுகளில் செடிகளை கொண்டு வந்து நட ஆரம்பித்தார். இப்படி மரங்களை நட ஆரம்பித்தவர் கடந்த 2001 முதல் 2019க்குள் சுமார் 40 லட்சம் மரங்களை நட்டு ஒரு பெரிய வனத்தையே உருவாக்கிவிட்டார்.

சரணாலயத்தை உருவாக்கினார்

சரணாலயத்தை உருவாக்கினார்

இதன் காரணமாக ஒரு வனவிலங்குகளும் வராமல் இருந்த அந்த பகுதியை தேடி வனவிலங்குகள் வரத்தொடங்கின. அப்போது 172 வகையான பறவைகள் அங்கு உள்ளன.அவற்றில் ஆறு அழிந்துபோகும் இனப்பட்டியலில் உள்ளவை ஆகும். இதுதவிரி 33 பாலுட்டும் வன விலங்குகள், 15 நீர்நில உயிரினங்கள், 15 ஊர்வன உயிரினங்கள் என அந்த வனமே மிக அழகான வனவிலங்குகளின் சரணாலயமாக திகழ்கிறது.

விழிப்புணர்வு முயற்சி

இந்த மறு வனவியல் பணிகளை நம்ப முடியாத அளவுக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியைபும் பார்ப்பவர்களுக்கு அளித்து வருகிறது. அந்த பகுதியைச் சுற்றியிருந்த மக்கள் செபஸ்டோவால் சுற்றுச்சூழலையும், இயற்கையின் அற்புதங்களையும் மதிக்க கற்றுக்கொண்டார்கள்.. இதன்விளைவாக இப்படி ஒரு அதிசயம் அங்கு நிகழ்ந்துள்ளது. இந்த வனத்தை உருவாக்கிய செபஸ்டோ சுற்றுச்சூழல் கல்வி மற்றும் மீட்பு மையத்தை தொடங்கி உள்ளார்.இந்த குழு சுற்றுச்சூழல் மீட்பு மற்றும் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது

 
 
 
English summary
Brazilian couple planted 4 million trees within 18 years to form a large forest. With the return of the rainforest came many species of animals that had previously abandoned the area.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X