For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“வானில் மின்னிய வட்டமான மோதிரம்” – முழு சூரிய கிரகணத்தை கண்டுகளித்த லட்சம் பேர்

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து மற்றும் வடக்கு ஐரோப்பாவை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முழுமையான மோதிர வடிவ சூரிய கிரகணத்தை இன்று கண்டுகளித்தனர்.

இந்த அரிய சூரிய கிரகணத்தைப் பற்றி வானியலாளர்கள் முன்னரே அறிவித்திருந்ததால் பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை சிறப்பு சூரிய கண்ணாடியை வைத்துக் கொண்டு கடற்கரை மற்றும் வீட்டு மொட்டை மாடிகளில் ஆவலுடன் காத்திருந்தனர்.

'Breathtaking' solar eclipse witnessed by millions

வானியலாளர்களின் அறிவிப்பின்படி, இன்று காலை 8.24 மணிக்கு சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே செல்லத் தொடங்கியது. அப்போது வடக்கு அட்லாண்டிக்கில் தொடங்கி ஆர்க்டிக் பிரதேசம் வரை கவியத் தொடங்கிய கரிய இருள், வட துருவத்தில் முடிவடைந்தது.

இங்கிலாந்தின் உள்ளூர் நேரப்படி காலை 9.41 மணியளவில் முழுமையான இருள் சூழ்ந்து சூரியன் ஒரு பிரம்மாண்டமான மோதிரத்தைப் போல காட்சியளித்தது. இதைப் பார்த்த அனைவரும் பரவசமடைந்தனர்.

இந்த அரிய சூரிய கிரகணம் சரியாக 9.35 மணிக்கு இங்கிலாந்தின் அனைத்து பகுதிகளிலும் 83% என்ற அளவில் முழுமையாக தெரிந்தது. அதிகபட்சமாக 9.43 மணிக்கு இங்கிலாந்தின் ஷெட்லாண்டு தீவில் சூரிய கிரகணம் 97% முழுமையாக காட்சியளித்தது.

திடீரென மேகங்கள் சூழ்ந்ததால் சில பகுதி மக்கள் சூரிய கிரகணத்தை காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இவர்களுக்காகவே செயற்கைக் கோளால் படம் பிடிக்கப்பட்ட சூரிய கிரகணம் இன்டர்நெட் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

அடுத்த ஆண்டு மார்ச் 9 ஆஆம் தேதி நிகழும் முழு சூரிய கிரகணத்தை, சுமத்ரா, போர்னியோ, சுலவேசி போன்ற பசிபிக் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே கண்டு களிக்க முடியும். இங்கிலாந்தில் இனி அடுத்த சூரிய கிரகணம் 2026 ஆம் ஆண்டே நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Millions of people in the UK and northern Europe have glimpsed the best solar eclipse in years. A great swathe of the Earth's surface was plunged into darkness as the Moon came between us and the Sun.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X