For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவின் ஷியாமெனில் 9-ஆவது பிரிக்ஸ் மாநாடு தொடக்கம்- பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு!

சீனாவின் ஷியாமெனில் 9-ஆவது பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஷியாமென்: சீனாவின் ஷியாமெனில் 9-ஆவது பிரிக்ஸ் மாநாடு தற்போது தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Recommended Video

    Brics Summit: PM Modi in China for BRICS Summit | Oneindia News

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் ஒன்றிணைந்து 'பிரிக்ஸ்' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. தற்போது 9-வது பிரிக்ஸ் மாநாடு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஷியாமென் நகரில் தொடங்கியது.

    BRICS Summit began in Xiamen today

    இந்த மாநாட்டை சீன அதிபர் ஜின்பிங் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை களைந்து, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தகவல் தொடர்பு மூலம் ஒருவர் மற்றவரின் கவலைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

    பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சந்திப்பு நாளை நடைபெறும் என தெரிகிறது.

    இந்த மாநாட்டில் பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து 5 நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிகிறது. டோக்லாம் விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே 70 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த மோதல் தற்போது தணிந்து இருக்கும் நிலையில், இரு நாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 8-ஆவது பிரிக்ஸ் மாநாடு கோவாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The three-day BRICS summit began in China's southwestern city of Xiamen where Prime Minister Narendra Modi and Chinese president Xi Jinping are likely to meet on the sidelines about Doklam issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X