For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணமகளே மருமகளே வா… வா… போயே போச்சு… இனி எல்லாம் இப்படித்தான்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

இந்து திருமணவிழாவில் மணப்பெண்ணை அழைத்து வருவதே ஒரு தனி சடங்கு... பட்டுப்புடவை சரசரக்க தலை நிறைய பூக்களை சூடி... கழுத்து நிறைய நகைகளை போட்டு அலங்கார தேவதையாய் இருக்கும் மணப்பெண்ணை, தோழிகள் மணப்பந்தலுக்கு அழைத்து வருவார்கள். அப்போது பின்னணியில் மணமகளே மருமகளே வா... வா... பாடல் பெரும்பாலும் ஒலிக்கும். மேடைக்கு அழைத்து வரப்பட்ட சில நிமிடங்களில் மந்திரங்கள் ஓத... மேள தாளங்கள் முழங்க மணமகன் தாலி கட்டுவார். இதுதான் இந்துக்களின் திருமண சடங்காக இருந்து வருகிறது.

திருமண விழா என்றாலே சிரிப்பும் கும்மாளமுமாய் களைகட்டும். ஆட்டம் பாட்டம் என்று தோழிகளும், தோழர்களும் அசத்துவார்கள். ஆனால் சிங்கப்பூரில் ஒரு இந்து தமிழ் குடும்பத் திருமண விழாவில் நடந்ததோ வேறு விதம். தோழிகளுடன் மணமகளும் ஆடியதுதான் இங்கே ஹைலைட்.

தோழிகளின் நடனம்

தோழிகளின் நடனம்

திருமணம் நடைபெறும் இடத்தை மணப்பெண்ணை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் எல்லோரும். அப்போது மணப்பெண்ணை அழைத்து வரும் தோழிகள் உற்சாகத்தில் ஆட்டம் பாட்டத்தோடு ஆரம்பிக்கின்றனர்... திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அதை கண்டு உற்சாக குரல் எழுப்புகின்றனர்.

என்னா பாட்டு…

என்னா பாட்டு…

ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு

அரைச்ச சந்தனமும் மணக்க

மதுரை மல்லிகைப்பூ

சிரிக்கும் செவ்வந்திப்பூ

செவந்த குங்குமப்பூ மயக்க... என்று ஒலிக்க தோழிகள் மணமகளை அழைத்து வருகின்றனர்.

அடுத்த ஆட்டம் ஆரம்பம்

அடுத்த ஆட்டம் ஆரம்பம்

இந்த ஆட்டத்தில் மணமகளும் பங்கேற்க திருமண விழா களை கட்டுகிறது... அவரது நடனம் உற்சாகத்தை அதிகரிக்க மணவிழா களைகட்டுகிறது.

அட பாடு புள்ளே…

அட பாடு புள்ளே…

இடையே வெறும் காத்து தாங்க வருது... என கமல் ரேவதியின் வசனம் வேறு வர நிலவரம் ஒரே சந்தோச கலவரம்தான். அப்புறம் ஆரம்பிக்கிறது அதிரடி.

அட மாமா…

அட மாமா…

மணமகன் மேடையில் காத்திருக்க மேடைக்கு வரும் முன்னே மணமகளின் நளிமான நடனம் பார்வையாளர்களுக்கு தனி உற்சாக விருந்தாகவே அமைகிறது. இதுநாள்வரை நாணத்தோடு நடந்து வந்து மேடையேறிய மணமகள்களை பார்த்த நமக்கு இது கொஞ்சம் வித்தியசமான மணவிழாவாகவே இருக்கிறது.

படம் பிடித்த கேமராக்கள்

படம் பிடித்த கேமராக்கள்

மணமகனின் வீரதீர பராக்கிரமங்களை கூறி ஆடியபடியே மேடைக்கு வருகிறார் மணமகள். இந்த நடனத்தை திருமணத்திற்கு வந்திருந்த அனைவரின் கைகளில் இருந்த செல்போன் கேமராக்கள் படம் பிடித்தன. இதனை யுடியூப்பிலும் பதிவேற்றியுள்ளனர்.

செம ஹிட்டுப்பா

இந்த மணவிழா நடனத்தை யுடியூப்பில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். ஏராளமானோர் லைக் போட்டுள்ளனர்.

மாப்பிள்ளை அழைப்பு

மணமகள் மேடைக்கு வருவதற்கு முன்னதாக மாப்பிள்ளையை அழைத்து வந்த தோழிகள் அவரை அழைத்து வந்த ஸ்டைல் வேறு விதம்.
"கருப்பு பேரழகா...கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா கிழிஞ்சிப்புட்டேன் நாரா"... என்று காஞ்சனா படத்தின் பாடலை பாட அதற்கு மணமகன் காட்டும் ஸ்டைல் அட அட அட... செம ஸ்டைலுப்பா.

மணமகளே வா வா

இதுவும் ஒரு இந்து தமிழ் திருமண விழாதான் மணமகளே மருமகளே வா வா என்று வரவேற்று ஆடிய நடனமும் செம ஹிட்தான் போங்க... மாமனாரும் கூட ஆடி வருவதுதான் ஹைலைட்... சிங்கப்பூர்ல என்ன எல்லோரும் இப்படி கிளம்பிட்டாங்க... நம்ம ஊர்ல எப்ப இப்படி நடக்கும்னு தெரியலையே? கூடிய சீக்கிரம் வந்திரும்னு நம்பலாம்.

English summary
Video- rocking entry of bride will shock you the way bride entered into the hall in Singapore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X