For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்யாணத்துக்கு வராத உறவினருக்கு சாப்பாட்டு “பில்” - அமெரிக்க மணமகள் செய்த கொடுமை!

Google Oneindia Tamil News

நியூயார்க்: நியூயார்க்கில் கல்யாணத்துக்கு வராத உறவினருக்கு பில் அனுப்பிய மணமகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சிறு குழந்தையுள்ள ஒரு பெற்றோர் உறவினரின் திருமண நாளின்போது தமது குழந்தையை பார்த்துக்கொள்ள வேலையாள் வராதுபோனதால் குறிப்பிட்ட திருமணத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனது.

பொதுவாக அமெரிக்காவில் திருமணம் செய்ய முடிவெடுக்கும் தம்பதியினர் யாரெல்லாம் தங்களது திருமணத்துக்கு வரவேண்டும் என முன்கூட்டியே தீர்மானித்து அதற்கேற்றாற்போல ஆளுக்கு ஏற்ப உணவுவகைகளை ஆர்டர் செய்வர்.

Bride sends wedding guest CHECK for $75 after she didn't turn up to the reception

அவர்களது இருக்கை எங்கேயிருக்க வேண்டும் என்பது வரை திருமணத்துக்கு நாள் பார்க்கும்போதே முடிவு செய்துகொள்வர்.

இருபது லட்ச ரூபாய்:

இருநூறு அல்லது முந்நூறு பேர் மட்டுமே பங்கேற்கும் இதுபோன்ற திருமணங்களின் செலவு குறைந்தது இருபது லட்சங்களைத் தாண்டும்.

வெறுப்பைக் காட்டிய மணமகள்:

இதுபோன்ற ஒரு திருமணத்தில், வராமல்போன உறவினர்கள் மீதான தனது வெறுப்பை காண்பிக்க எண்ணிய அந்த மணமகள் வரியுடன் சேர்த்து 75 அமெரிக்க டாலருக்கான பில்லை தனது உறவினருக்கு அனுப்பியுள்ளார்.

என்ன செய்யறது நான்:

இந்தப் பில்லுக்கு பணம் செலுத்தினால் பிரச்சனை முடியுமா அல்லது இதற்கு பதிலாக என்ன செய்ய வேண்டும் என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆயிரக்கணக்கில் அறிவுரை:

இதனையடுத்து அந்த மணமகளான பெண்மணிக்கு, ஆயிரக்கணக்கானோர் இப்படி உறவுகளை மதிக்காமல் நடந்து கொள்ளாதீர்கள் என்று ஆலோசனை கூறி வருகின்றனர்.

English summary
A Minnesota woman is outraged after she received a dinner bill when she cancelled on her friend's wedding the day of the ceremony.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X