For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது.. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்

Google Oneindia Tamil News

பிரசல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் மறறும் -பிரிட்டனுக்கும் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

Brexit. (Britian Exit) அதாவது பிரிட்டன் வெளியேறுதல் என்று பொருள். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதே இந்த ஒப்பந்தத்தின் முன்வடிவம்.

Britain, European Union reach new Brexit deal: British PM Boris Johnson

குடியுரிமை தளர்வு காரணமாக அகதிகள் பலர் ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகிறார்கள். இதன் மூலம் இங்கிலாந்திலும் குடியேறுகிறார்கள். இதனால் பிரட்டனின் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக கருதினர் அவர்களின் கருத்து பலமான நிலையில் 2018ம் ஆண்டு இதுதொடர்பாக வாக்கெடுப்பு பிரட்டனில் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 71.8 % பேர் கலந்து கொண்டனர். 51.9 % மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தைகள் பெரிதாக பலன் தராமல் இருந்தது. இந்நிலையில் இன்று பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை முடிவில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் தனது ட்விட்டில் "கட்டுப்பாட்டை திரும்பப் பெறும் ஒரு புதிய ஒப்பந்தம் எங்களுக்கு கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட நிலையில இதற்கு இனி பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றங்களின் ஒப்புதல் தேவைப்படும். இதற்காக பிரிட்டன் நாடாளுமன்றம் விரைவில் கூட உள்ளது. இரண்டு அவைகளிலும் பிரெக்ஸிட் நிறைவேற்றப்பட்டால் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிவிடும். இது நிச்சயம் ஐரோப்பிய நாடுகளின் தொழில் அதிபர்களை பாதிக்கும் ஒன்றாகும்.

English summary
Britain, European Union reach Brexit deal: British PM Boris Johnson said We have a great new Brexit deal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X