For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்... இங்கிலாந்தில் அதிசயம்

இங்கிலாந்தில் பெண்ணாக பிறந்து ஆணாக மாற ஆசைப்பட்டு அதற்குரிய அறுவை சிகிச்சையை செய்த பின்னர், செயற்கை முறையில் விந்தணு தானத்தின் மூலம் கருத்தரித்து பெண் குழந்தையை பெற்றுஎடுத்த சம்பவம் ஆச்சரியம் கலந்த

By Devarajan
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் பெண்ணாக பிறந்தவர் ஆணாக மாற ஆசைப்பட்டு அதற்குரிய அறுவை சிகிச்சையை செய்து ஆணாக மாறினார். தற்போது அவர் செயற்கை முறையில் விந்தணு தானத்தின் மூலம் கருத்தரித்து, பெண் குழந்தையை பெற்றுஎடுத்த சம்பவம் ஆச்சரியம் கலந்த அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் நாட்டின் தென்கிழக்கு இங்கிலாந்துக்குட்பட்ட குளூசெஸ்ட்டர்ஷைர் பகுதியை சேர்ந்தவர் பைகே. பெண்ணாக பிறந்த இவர் இளம்வயதில் தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்ததால் நிரந்தரமாகவே ஆணாக மாற விரும்பினார்.

அதனையடுத்து, தனது மன இயல்புக்கு தக்கவாறு முழுமைபெற்ற ஆணாக மாறிவிட பைகே முடிவெடுத்தார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி பிறப்புறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்ய விரும்பினார். அதற்கான மருத்துவ செலவான சுமார் 30 ஆயிரம் பவுண்டுகளை இங்கிலாந்து அரசு சுகாதாரத்துறை ஏற்றுக்கொண்டது.

 ஹேடன் ராபர்ட் கிராஸ்

ஹேடன் ராபர்ட் கிராஸ்

பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து உடல்நலம் தேறிய அவர், பைகே. என்ற தனது பெயரை ஹேடன் ராபர்ட் கிராஸ் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். ஆணுக்குரிய உடல் அங்க அசைவுகளை அவர் கற்றுக்கொண்டார்.

 கருப்பையை மற்றும் அகற்றவில்லை

கருப்பையை மற்றும் அகற்றவில்லை

தன்னை ஆணாகவே தக்கவைத்து கொள்ள தேவையான தொடர் சிகிச்சைகளையும் அவர் பெற்று வந்தார். ஆனால், தனது கருப்பையை மட்டும் அவர் அகற்றிக் கொள்ளவில்லை. இதனால் அவர் தாயாகும் வாய்ப்பை இழக்காமல் இருந்தார்.

 விரும்பிய போது குழந்தை

விரும்பிய போது குழந்தை

சூப்பர் மார்க்கெட்டில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலைபார்த்து வந்தார். தனது கருப்பையில் வளரும் கருமுட்டைகளை அதற்கான பாதுகாப்பு வங்கிகளில் சேமித்து, தான் விரும்பியபோது குழந்தை பெற்றுகொள்ளவும் ஹேடன் கிராஸ் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார்.

 முட்டுக் கட்டைபோட்ட அரசு

முட்டுக் கட்டைபோட்ட அரசு

ஆனால், அவரது எதிர்கால திட்டத்துக்கு, முட்டுக்கட்டையாக , இங்கிலாந்து அரசு சுகாதார காப்புறுதி திட்டத்தின் மூலம் கரு முட்டைகளை சேமித்து வைப்பதற்கான நிதியை இனி வழங்க இயலாது என்று அறிவித்து விட்டது.

 அதிர்ச்சியில் ஹேடன் கிராஸ்

அதிர்ச்சியில் ஹேடன் கிராஸ்

இதனால், அதிர்ச்சி அடைந்த ஹேடன் கிராஸ், தன்னால் இனி முழு ஆணாக மாறி, வேறொரு பெண்ணுடன் இணைந்து குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா? அது சாத்தியமா என்று எண்ணி குழம்பினார். இந்தச் சிக்கலை எப்படி தீர்ப்பது என்று தொடர்ந்து சிந்தித்தார்.

 பெண்ணாக இருந்தே குழந்தை பெற முடிவு

பெண்ணாக இருந்தே குழந்தை பெற முடிவு

ஒரு பெண்ணாகவே இருந்து உடனடியாக, ஹேடன் கிராஸ் , குழந்தை பெற்றுக் கொள்வதற்கான யோசனையை நடைமுறைப்படுத்தினார். பேஸ்புக் மூலம் விந்து தானம் தொடர்பான வலைத்தளங்களை தேடிப்பிடித்து விந்துதானம் செய்யும் ஒரு நபரையும் அவர் கண்டுபிடித்தார்.

 விந்து தானம் மூலம் கருவுற்றார்

விந்து தானம் மூலம் கருவுற்றார்

பேஸ்புக் நண்பர் கொடுத்த அவரது விந்தணுவை தனது கருப்பையில் செலுத்திக்கொண்டார். பின்னர், தான் கருவுற்றிருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்து ஹேடன் கிராஸ் பரபரப்பை ஏற்படுத்தினார்.

 கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது

கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது


இந்நிலையில், ஹேடன் கிராஸ், கடந்த 16-6-2017 அன்று குளூசெஸ்ட்டர்ஷைர் ராயல் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்

 மீண்டும் ஆணாக மாற விருப்பம்

மீண்டும் ஆணாக மாற விருப்பம்


மீண்டும் ஹேடன் கிராஸ் ஆணாகவே இருக்கப் போவதாக தற்போது அறிவித்துள்ளார். மேலும் தனது குழந்தைக்கு ஒரு வயதாகும்போது வேறு ஏதாவது வேலையில் சேர தீர்மானித்துள்ளதாக கூறி நெகிழ்கிறார் தாயுமான, தந்தையுமான ஹேடன் கிராஸ்.

English summary
Hayden Cross has made history by becoming the first British man to give birth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X