For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடிபோதையில் ரகளை செய்த பயணி: பாஸ்டனுக்கு திருப்பிவிடப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

By Siva
Google Oneindia Tamil News

ஹூஸ்டன்: லண்டனில் இருந்து அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அதில் இருந்த பயணி ஒருவர் செய்த செயலால் பாஸ்டனுக்கு திருப்பி விடப்பட்டது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு நேற்று கிளம்பியது. விமானத்தில் பயணம் செய்த இங்கிலாந்தில் உள்ள அஸ்புல் கிராமத்தைச் சேர்ந்த டாரன் ஏ. ஹாலிவெல்(48) தனது அருகே உள்ள இருக்கையில் இருந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். குடிபோதையில் அவர் 20 வயது பெண்ணை தாக்கியுள்ளார். தட்டிக்கேட்ட அந்த பெண்ணின் தாத்தாவுடன் சண்டை போட்டுள்ளார்.

British Airways flight diverted to Boston due to unruly passenger

மேலும் தனது சட்டையை கழற்றிவிட்டு விமானத்தில் நடந்துள்ளார். டாரனின் செயலால் பிற பயணிகள் எரிச்சலும், பீதியும் அடைந்தனர். இதையடுத்து விமானம் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பாஸ்டன் நகருக்கு திருப்பிவிடப்பட்டது.

விமானம் மதிய வேலையில் பாஸ்டனை அடைந்தது. பாஸ்டனில் உள்ள லோகன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் டாரனை கீழே இறக்கிவிட்டனர். அதன் பிறகு விமானம் ஹூஸ்டன் சென்றது. டாரனை பாஸ்டன் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

எங்கள் வாடிக்கையாளர்கள் பிரச்சனையின்றி பயணம் செய்வது தான் எங்களுக்கு முக்கியம். இது போன்ற செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. விமானத்தை பாஸ்டனுக்கு திருப்பிவிட்டு கேப்டன் சரியான முடிவை எடுத்துள்ளார். இந்த விவகாரத்தை தற்போது போலீசார் பார்த்துக் கொள்வார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
A British Airways flight from London to Houston was diverted to Boston after an unruly passenger assaulted a woman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X