For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமானம் நடுவானில் பறக்கையில் பயணியை நறுக்கென்று கடித்த கோபக்கார சக பயணி

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: துபாயில் இருந்து லண்டனுக்கு சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணி ஒருவர் சக பயணியை கடித்து காயப்படுத்தினார்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பயணிகளுடன் துபாயில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு கிளம்பியது. விமானம் 40 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கையில் அதில் இருந்த 21 வயது வாலிபர் ஒருவர் சிப்பந்தி பெண்ணான ஹெய்லியுடன் பிரச்சனை செய்தார்.

இதை பார்த்த சக பயணியான இங்கிலாந்தின் ஸ்ட்ராட்போர்டு அபான் ஏவனை சேர்ந்த கிறிஸ்டோபர் மெக்நெர்லின் ஹெய்லியின் உதவிக்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கிறிஸ்டோபரின் கையில் நறுக்கென்று கடித்துவிட்டார். இதில் கிறிஸ்டோபர் காயம் அடைந்தார்.

அந்த வாலிபரை சிப்பந்திகள் சேர்ந்து பிடித்து இருக்கையில் அமரவைத்து கையில் விலங்கிட்டனர். விமானம் தரையிறங்கியதும் அவர் லண்டன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விமானம் தரையிறங்கியதும் விமானி கென்டால் கிறிஸ்டோபரை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். விமானியின் அறையை பார்த்ததில் மகிழ்ச்சி என கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

English summary
A passenger was bitten by a fellow violent passenger on board British Airways flight from Dubai to London.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X