For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டன் நாட்டின் தூதரை திடீரென கைது செய்ததது ஈரான்.. உச்ச கட்ட பரபரப்பு

Google Oneindia Tamil News

டெஹ்ரான்: அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக குற்றம்சாட்டி பிரிட்டன் தூதரை ஈரான் கைது செய்தது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு ஆக்ரோசம் அடைந்த ஈரான், தவறுதலாக டெஹ்ரானில் இருந்து 176 பேருடன் புறப்பட்ட உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. மனித தவறால் சுட்டு வீழ்த்தியதை ஈரானும் ஒப்புக்கொண்டது.

British ambassador to Iran arrested and held for several hours in Tehran

இதனால் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவத்தை கண்டித்து அந்நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது.

அரசு உத்தரவிட்டால் .. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க தயாராக உள்ளோம்.. இந்திய ராணுவ தளபதி பேட்டி அரசு உத்தரவிட்டால் .. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க தயாராக உள்ளோம்.. இந்திய ராணுவ தளபதி பேட்டி

ஈரான் அரசின் உயர்மட்ட தலைவரான அயத்துல்லா காமேனிக்கு எதிராக நடந்து வரும் இந்த போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் பலர் குதித்துள்ளனர். இந்நிலையில் அரசுக்கு எதிராக மாணவர்களை போராட தூண்டியதாக பிரிட்டன் தூதர் ராப் மெக்கரை அமிர் கபீர் பல்லைக்கழகம் அருகே தடுத்து நிறுத்திய ஈரான் ராணுவம், பின்னர் அவரை கைது செய்து சில மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து விடுவித்தது.

இந்த விவகாரம் வெளியே தெரிந்த உடன் பிரிட்டன் கடும் ஆத்திரம் அடைந்தது. போராட்டத்தை தூண்டியதாக தங்கள் நாட்டு தூதரை தடுப்பு காவலில் வைத்து சர்வதேச விதிகளை மீறிய செயல் என கண்டனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஈரான் மீது கோபத்தில் இருக்கும் அமெரிக்காவும் ஈரான் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

English summary
britain’s ambassador to Iran, Rob Macaire, has been arrested and held for several hours after attending a vigil
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X